என்னோட ரேஞ்சே வேற! : கெத்து காட்டும் கீர்த்தி சுரேஷ்
‘ரஜினி முருகன்’ வெற்றியால் தேடி வந்த ‘விஜய் 60’ படத்தில் கமிட்டான பிறகு தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராகி விட்டார் கீர்த்தி சுரேஷ்.
அதோடு மீண்டும் சிவகார்த்திகேயனோடு ‘ரெமோ’ படத்திலும் நடித்திருக்கிறார்.
இப்படி அடுத்தடுத்த பெரிய பட்ஜெட், மாஸ் ஹீரோக்கள் என கீர்த்தி சுரேஷின் லெவலே ஹை ரேஞ்ச் ஆகி விட்டதாம்.
இதனால் அவரை நாயகியாக்க ஆசைப்படும் இயக்குநர்கள் அவரிடம் கதை சொல்ல நெருங்கவே கஷ்டமாகிப் போய் விட்டதாம்.
தற்சமயம் எந்தப் புதுப்படத்தையும் கமிட் செய்யாமல் இருக்கும் கீர்த்தி ‘இனிமே என்னோட ரேஞ்சே வேற’ அதனால ‘ரெமோ’ ரிலீசானவுடன் வாருங்கள் என்று தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் கதையே கேட்காமல் திருப்பி அனுப்பி விடுகிறாராம்.
கீர்த்தியின் அட்ராசிட்டி இப்படி என்றால் அவரது தாய்க்குலமோ தமிழில் மட்டும் முன்னணி நடிகையானால் பத்தாது என்று மகளை தெலுங்குப் படங்களிலும் இறக்கி விட காய் நகர்த்தி வருகிறார்.
அவர் மாஜி நடிகை என்பதால் தனக்குத் தெரிந்த பெரிய இடத்து தொடர்புகள் மூலம் பெரிய ஹீரோவோடு, பெரிய பேனர் படங்களில் மகளை நடிக்க வைக்க களமிறங்கியிருக்கிறார்.
அது முடிஞ்சதும் எங்க கன்னடமா?