இன்னும் 10 வருஷத்துக்கு சிவகார்த்திகேயனை அசைக்க முடியாது! : ஷங்கர் ‘சர்ட்டிபிகேட்’

Get real time updates directly on you device, subscribe now.

shankar

மூகத்தில் ஒருவரின் குறுகிற கால வளர்ச்சி என்பது எல்லோருக்கும் கொஞ்சம் பொறாமையை கிளப்பி விடத்தான் செய்யும். அதிலும் சினிமாவில் என்றால் கேட்கவே வேண்டாம். ஆளாளுக்கு வெளிப்படையாகவே அந்த வளர்ச்சியைப் பற்றி மேடையில் பேச அல்லது புலம்ப ஆரம்பித்து விடுவார்கள்.

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த நடிகர்களில் இப்போதைக்கு எல்லோர் கண்களையும் உறுத்திக் கொண்டிருப்பது சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தான்.

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சி செய்பவர்களே இப்போதும் தகிடு தத்தம் ஆகிக்கிடக்க மிக குறுகிற காலகட்டத்திலேயே தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி ஹீரோக்களில் ஒருவராகி விட்டார் சிவகார்த்திகேயன்.

அவ்வளவு ஏன் அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குநர் பாண்டிராஜும், அவரை ஹீரோவாக வைத்து படம் தயாரித்த தனுஷுமே புலம்புகிற அளவுக்கு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எகிறிக் கிடக்கிறது.

வளர்த்து விட்டவர்கள் புலம்புவது இயல்பு தான் என்றாலும் பிரம்மாண்டம் என்ற சொல்லுக்கு சொந்தக்காரரான இயக்குநர் ஷங்கரே சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பற்றி புகழ்ந்து பேசியது தான் தான் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது.

Related Posts
1 of 49

சில தினங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ரெமோ’ படத்தின் ப்ர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ட்ராக் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவுக்கு செய்யப்பட்டிருந்த முன்னேற்பாடுகளைப் பார்த்து வியந்து போன ஷங்கரே ‘2.O’ படத்தின் ஆடியோ பங்ஷனை எப்படியெல்லாம் நடத்தலாம் என்று இங்கே எனக்கு ஐடியா கிடைத்திருக்கிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் ”சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிரமிக்கும் வகையில் உள்ளது. மாஸ் ஹீரோவாக மாறி வரும் அவர், இன்னும் ஒரு ஐந்து வருஷம், பத்து வருஷம் அப்படியே போகலாம். என்றாலும் அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த ‘ரெமோ’ படத்தில் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார். இது பாராட்ட வேண்டிய விஷயம்.

காரணம், ஒரு பெண்ணாக மாறி நடிப்பது அத்தனை எளிதான விஷயமல்ல. தனது உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் அதற்கு தயாராக வேண்டும். அதோடு, மேக்கப் மற்றும் உடைகளை அணிந்து கொண்டு தயாராவதற்கு அதிக நேரம் பொறுமையுடன் இருக்க வேண்டும். அதையெல்லாம் செய்து இந்த படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

மேலும் இந்த படத்தில் பி.சி.ஸ்ரீராம் சார் ஒளிப்பதிவாளராக இருக்கிறார். அவர் இந்த படத்திற்கு கிடைத்திருப்பது பெரிய ப்ளஸ். படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற டெக்னீசியன்களும் திறமையானவர்கள். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்யக்கூடியவர்கள். அந்த வகையில், கடின உழைப்பில் உருவாகியிருக்கும் இந்த ரெமோ படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார் இயக்குநர் ஷங்கர்.