மலைவாழ் மக்களின் வலியைச் சொல்லும் ‘கெவி’!

Get real time updates directly on you device, subscribe now.

ARTUPTRIANGLES FILM KAMPANY ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாராகி வரும் படம் ‘கெவி’. இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடிக்க, ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன் மற்றும் உமர் ஃபரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள கெவி என்கிற கிராமத்தைச் சுற்றி, அந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர்கள் ஜி.பாலசுப்பிரமணியன் சா.ராஜாரவிவர்மா இசையமைத்துள்ளனர்.படம் ஜூலை 18 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. ஹரி உத்ரா புரொடக்ஷன்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.