‘கே ஜி எஃப் 2’ ட்ரைலர் நாளை வெளியீடு!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் முன்னணி நடிகர் யஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகிறது.ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, 250 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் சாதனை படைத்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’ திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்..