ஜி.வி பிரகாஷுக்காக தியாகி ஆன தமன்னா! : கெட்டியாக பிடித்துக் கொண்டார் காஜல்

Get real time updates directly on you device, subscribe now.

Kajal Aggarwal

2014-ம் ஆண்டு கங்கணா ரணாவத் நடிப்பில் ஹிந்தியில் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் தான் ”குயின்”.

இப்படத்தை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை தன் வசமாக்கி வைத்திருக்கிறார் பிரசாந்த்தின் அப்பாவும், நடிகருமான தியாகராஜன்.

உரிமையை வாங்கி பல மாதங்கள் ஆகி விட்ட நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தமன்னாவை நடிக்க வைக்க முயற்சி செய்தார் தியாகராஜன்.

Related Posts
1 of 10

ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமான அந்தப் படத்திலிருந்து விலகி விட்டார் தமன்னா.

இதனால் அப்படத்தை ஆரம்பிப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. இப்போது தமன்னாவுக்குப் பதிலாக காஜல் அகர்வால் குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

கதாநாயகி போலவே முதலில் இப்படத்தை தமிழில் ரேவதி தான் இயக்குவதாக இருந்தது. இப்போது அவருக்குப் பதில் நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.

விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இப்படத்தில் தமன்னா விலகியதுக்கு காரணம் கால்ஷீட் பிரச்சனை என்று தமன்னா தரப்பில் சொல்லப்பட்டாலும் உண்மையான காரணம் அது இல்லையாம். ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்க ஒரு வாய்ப்பு வந்ததால் அதில் நடிப்பதற்காகத்தான் குயின் பட வாய்ப்பை உதறி விட்டாராம் தமன்னா.