கூகுள் குட்டப்பா- விமர்சனம்
மனித உணர்வுகளை இயந்திரத்தில் எதிர்பார்த்தால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை மேம்போக்காகச் சொல்லிருக்கும் படம் கூகுள் குட்டப்பா
சொந்த மண்ணே சொர்க்கம் என வாழும் கறார்பேர்வழி கே.எஸ் ரவிக்குமார். ரோபாட்டிக் படிப்பை முடித்து ஜெர்மனிக்கு வேலைக்குச் செல்லும் மகன் தர்ஷனை தன்னோடே இருக்கச் சொல்கிறார். ஆனால் மகன் ஜெர்மனி போயே தீருவேன் என்று பிடிவாதம் செய்கிறார். ஒரு கட்டத்தில் தர்ஷன் அப்பாவுக்கு உதவியாக ஒரு ரோபோவை செட் செய்து வைக்கிறார். அந்த ரோபோவிற்கும் கே.எஸ் ரவிக்குமாருக்குமான பாண்டிங் எந்தளவிற்கு வளர்கிறது..அதனால் என்னென்ன பிரச்சனைகள் வருகிறது என்பதே படத்தின் கதை
மலையாளத்தில் சக்கைப்போடு போட்ட ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படத்தின் அபிஷியல் ரிமேக் இந்தப்படம்..அந்தப்படத்தில் நிறைய ப்ளஸ்கள் இருந்தன. அவற்றை அப்படியே காபிபேஸ்ட் பண்ணியிருந்தாலே இந்த கூகுள் குட்டப்பா பார்டர் தாண்டியிருப்பார். அந்த விசயத்தில் சின்னதாக கோட்டை விட்டிருக்கின்றனர் இயக்குநர்கள் சபரி& சரவணன்
நடிகர்களில் கே.எஸ் ரவிகுமாரை மட்டும் தான் ஓரளவு ஸ்கோர் செய்கிறார். தர்ஷன் லாஸ்லியா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. யோகிபாபு காமெடி ஒரு சில இடங்களில் மட்டுமே எடுபடுகிறது
ஒளிப்பதிவு பின்னணி இசை உள்ளிட்ட டெக்னிக்கல் டீம் மட்டும் படத்தில் நன்றாக வேலை செய்துள்ளது. படத்தின் ஸ்டேஜிங்கைச் சரியாகச் செய்து உணர்வுகளை சரியாக கையாண்டிருந்தால் கூகுள் குட்டப்பா செயற்கையாக இல்லாமல் இயல்பாக இருந்து ஈர்த்திருப்பார்
2.5/5