ஆகஸ்ட் 20ல் ‘சண்டக்கோழி 2’ சிங்கிள் ட்ராக்

Get real time updates directly on you device, subscribe now.

விஷால் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘சண்டக்கோழி’.

2005 ஆம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி ரிலீசான இந்தப்படம் இன்றளவும் திரைப்பட விரும்பிகளின் மிகவும் பிடித்தமான படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. வெளிவந்து பல வருடம் ஆன பின்னரும் இன்றும் சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் போதும் ரசிகர்களால் ரசித்து கொண்டாடும் படமாக உள்ளது.

அந்தப் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக ‘சண்டக்கோழி 2’ தற்போது உருவாகி வருகிறது.

Related Posts
1 of 74

இதில் விஷால், இயக்குனர் லிங்குசாமி மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்ற வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த வருடம் வெளியாக உள்ள திரைப்படங்களில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படமாக இந்தப்படம் உள்ளது.

’சண்டக்கோழி 2’ டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று யுவன் இசையில் சண்டக்கோழி 2 முதல் சிங்கிள் வெளியாகவுள்ளது.