விஜய் சந்தர் டைரக்ஷனில் விஜய் சேதுபதியின் புதுப்படம் ஆரம்பம்!
‘பாதாள பைரவி’ முதல் பைரவா வரை 60-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை தயாரித்த விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்குகிறார்.
இவர் விக்ரமை வைத்து ஸ்கெட்ச் ஹிட் படத்தை கொடுத்தவர். அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் விஜய் சந்தர் விஜய் சேதுபதியுடன் முதன் முறையாக இப்படத்தில் இணைகிறார்.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராக்ஷிகண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்கள் இவர்களுடன் சூரி, நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.
படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு மார்ச் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் ஆரம்பமாகிறது.