கூழாங்கல்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

தமிழில் ஓர் உலக சினிமா

காட்சியனுபவமாக மிக உயரிய முயற்சி கூழாங்கல் படம். கதை என்று பார்த்தால் ஒரு சிறிய நிகழ்வே கதை. கோபமும் குடி பழக்கமும் மிகுதியாக உள்ள ஒரு கணவன் தன் மகனை அழைத்துக் கொண்டு மாமியார் ஊருக்குச் செல்கிறார். தன் மனைவியை அழைத்து வர அவர் மகனோடு சென்று வரும் பயணமும், அந்தப்பயணத்தில் நடக்கும் நிகழ்வுகளும் தான் படத்தின் கதை

படத்தின் ஒட்டுமொத்த பாசிட்டிவ் அம்சமும் நடிகர்களின் நடிப்பிலே அடங்கிவிடுகிறது. எல்லோருமே வாழ்ந்துள்ளனர். எலிகளைப் பதி வைத்து பிடிக்கும் எளிய மனிதர்களின் முக பாவங்கள் கூட கச்சிதமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. சிறுவன், சிறுமி என ஒவ்வொரு கேரக்டரும் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுள்ளது

இரு ஒளிப்பதிவாளர்கள் படத்தை உலகத்தரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். படத்தின் திரைக்கதை சொல்லும் செய்திகளை விட, விஷுவல்ஸ் நிறைய கதை சொல்கிறது. பின்னணி இசையின் பங்களிப்பு இப்படத்திற்கு மிக முக்கியமான ஒன்று. அந்தப் பொறுப்பை உணர்ந்து அசத்தியுள்ளார் யுவன் சங்கர் ராஜா.

புல்மேல் விழுந்த பனித்துளியின் விஷுவல் எப்படி நம் மனதை மகிழச்செய்யுமோ அப்படியான சில நெகிழ்வுகளும், கனல் மேல் விழுந்த புழுவாக சில கனமான பதிவுகளும் நம்மை அசைத்துப்பார்க்கின்றன. நிச்சயமாக தமிழில் ஒரு உலகசினிமா இந்த கூழாங்கல்
4/5