குஷி- விமர்சனம்
சேர்தல், பிரிதல், பின் சேர்தல் என வழக்கமான காதல் கதை தான் குஷி. வெறும் கதையா சினிமா? திரைக்கதை தானே சினிமா!
BSNL-ல் வேலை பார்க்கும் விஜய் தேவரகொண்டா வீம்பு பண்ணி காஷ்மீருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிச் செல்கிறார்..அங்கு சமந்தாவைக் கண்டதும் காதல். அந்தக் காதலில் சில ட்விஸ்ட்கள்! பின் இருவரின் வீட்டின் மனிதர்களும் வட துருவம் தென் துருவமாக நிற்க, அவர்களை மீறி திருமணம் செய்து கொள்கிறார்கள். அதற்குப் பின் நடக்கும் ஈகோ லவ் ஆகியவை தான் இந்தக் குஷி
விஜய் தேவரகொண்டா நாம் ஆல்ரெடி பார்த்துப் பார்த்து சலித்துப் போன நடிப்பையே வழங்கியுள்ளார். வெகுசில இடங்களில் மட்டும் நிறைவு. சமந்தா வழமை போல தன் இருப்பை அருமையாக நிறுவுகிறார். மனைவி,காதலி, கடவுள் பக்தை என எத்தனை பரிமாணங்கள் அவரது நடிப்பில் அடேயப்பா! சச்சின் படேகர், முரளி சர்மா, சரண்யா பொன்வண்ணன், லெட்சுமி ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்துள்ளனர். இவர்களைத் தாண்டி தனித்து ஸ்கோர் செய்வது ஜெயராமும் ரோஹினியும்!
ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசை பெரும் இதம் இல்லாவிட்டாலும் பேரிரைச்சல் இல்லை. ஆராதித்யா என்ற பாடல் அருமை. முரளிG கேமரா பிரம்மாண்டங்களை அள்ளி வந்திருக்கிறது. எடிட்டர் பிரவுன் புடி படத்தை இருபது நிமிடம் வரை வெட்டி வீசியிருக்கலாம்
பார்த்துப் பழகிய திரைக்கதை பார்மட் தான். ஆனாலும் ஆர்டிஸ்ட் வேல்யூ இருப்பதால் படத்தை ரசிக்க முடிகிறது. தேவையில்லாத ஒரு ட்ரைன் பைட் ஒன்றை வைத்து நேரத்தையும் பணத்தையும் வேஸ்ட் செய்துள்ளார்கள். கதைக்குச் சம்பந்தமில்லாத எந்தக் காட்சியும் எவ்வளவு நன்றாக இருந்தாலும் எடுபடாது! காதல் ததும்பும் முதல் பாதி சற்று சோர்வு தந்தாலும், இல்லற வாழ்வு சங்கதிகள் இரண்டாம் பாதியில் நிறைவைத் தந்துவிடுவதால் குஷி ஓரளவு ரசிகனை குஷிப்படுத்தவே செய்யும்!
3/5