லத்தி- விமர்சனம்

விஷால் தன் முந்தைய படங்களில் என்னவெல்லாம் செய்தாரோ அதையே தான் இதிலும் செய்துள்ளார்
படத்தில் சஸ்பென்சனில் இருக்கும் கான்ஸ்டபிள் விஷால். மனைவி மகன் என வாழும் அவருக்கு ஸ்டேசனில் ரீ ஜாய்ன் செய்யும் வாய்ப்பு வருகிறது. கூடவே சிட்டியின் பெரும் தாதாவான சுறா மகன் வெள்ளையிடம் ஒரு பிரச்சனையும் வருகிறது. அந்தப் பிரச்சனையை விஷால் எப்படி முடிக்கிறார் என்பதை பல பிரச்சனைகளோடு சொல்லியிருக்கிறார் இயக்குநர்
விஷால் நடிப்பதை மறந்து அடிப்பதை எடுத்துக்கொண்டார் போல. ஒரு காட்சியில் மட்டும் லேசாக நடித்துள்ளார். சுனைனா குடும்பத்தலைவியாக ஈர்க்கிறார். விஷாலின் மகன் கேரக்டரில் நடித்துள்ள சிறுவன் உணர்ச்சிகளை கடத்துகிறான். வில்லனத்தில் வெள்ளை என்ற கேரக்டரில் ரமணா மிரட்டுகிறார். தலைவாசல் விஜய், பிரபு ஆகியோரும் தலையைக் காட்டுகிறார்கள். முனிஷ்காந்த் நன்றாக நடித்துள்ளார்
இப்படியான நடிகர்களின் பங்களிப்பை எல்லாம் பலவீனமான திரைக்கதையால் இயக்குநர் வீணடித்துள்ளார். மேக்கிங்கில் காட்டிய அக்கறையை இயக்குநர் திரைக்கதையில் காட்டியிருக்கலாம். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை ஓரளவு ஆறுதல் அளிக்கிறது. பாடல்கள் பெரிதாக கவரவில்லை. ஒளிப்பதிவில் நல்ல குவாலிட்டி தெரிந்தாலும் படம் ஒரே இடத்தில் நகர்வதால் ஒளிப்பதிவாளரால் பெரிதாக வெரைட்டி காட்ட முடியவில்லை
தமிழ் சினிமாவில் வில்லன்களை அடிப்பதற்கென்றே நேர்ந்து விடப்பட்டவராக விஷால் இருக்கிறார். தயவுசெய்து அவர் தன்னை மீட்டுரூவாக்கம் செய்யவேண்டும். அதுதான் அவர் கரியருக்கு நல்லது. இல்லை என்றால் ரசிகர்களின் லத்தி விஷாலின் பிஸ்னெஸ் கல்லாவைப் பதம் பார்த்து விடும்
2/5