எனிமி- விமர்சனம்
ஓர் எமோஷ்னல் நீயா தானா தான் எனிமி! சிறுவயது விஷால் ஆர்யா இருவரும் நல்ல நண்பர்கள். விஷாலின் தந்தை தம்பிராமையா எதற்கும் பயப்படும் கேரக்டர். விஷால் எதற்கும் துணிந்த கேரக்டர். ஆர்யாவின் தந்தை பிரகாஷ்ராஜ் வெரிவெரி ஸ்மார்ட் கேரக்டர். ஆர்யா கொஞ்சம் பொறாமை பிடித்த கேரக்டர். சிறுவயதில் நண்பர்களாக இருக்கும் இருவரும் ஒரு கட்டத்தில் பிரிகிறார்கள். வளர்ந்த பின் எதிரிகளாகச் சந்திக்கிறார்கள். இவர்களுக்குள் நடக்கும் போட்டியில் யார் ஜெயிக்கிறார் என்பதே மீதிக்கதை
படத்தின் ஆரம்பக் காட்சிகள் அதகளம். விஷால் ஆர்யா கேரக்டர்களை சின்ன வயதிலே சொல்லும் ஐடியாக்கள் எல்லாமே சூப்பர் ரகம். அதாவது விஷால் ஆர்யா பெரியவர்களாக என்டர் ஆகும் வரை படம் வொண்டர் வொண்டர். அதற்கு அப்புறம்? நடுங்குப்புறம் தான்
தெளிவான திரைக்கதை இன்மையே இப்படத்தின் பெருங்குறை. விஷால் ஆர்யா இருவருக்குமான கேரக்டர் விவரிப்பில் இருந்த கவனம் அதை தொடர்வதிலும் இருந்திருக்க வேண்டும். மிகப்பெரிய ஐடியாக்களை எல்லாம் திரையில் காட்டுகிறார்கள். ஆனால் நாம் அவற்றோடு கனெக்ட் ஆகவே முடியவில்லை. சிங்கப்பூருக்கு வருகை தரும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரை சைனாக்காரர்கள் சொல்ல…ஆர்யா தீர்த்துக்கட்ட முயற்சிக்க..அதை விஷால் தடுக்க..என ஒரு சீக்வென்ஸ் பரபர வேகத்தோடு இருந்தாலும்…பார்க்கும் போதே ஏன்யா காதுல பூ சுத்துறீங்க என்றும் தோன்றிவிடுகிறது. நிறைய யூனிக் விசயங்கள் படத்தில் இருக்கிறது. அதனால் அதுவே போதும் என்ற மெத்தனம் ரைட்டிங்கில் அப்பட்டமாக தெரிகிறது.
விஷால் சண்டைக்காட்சிகளில் அனல் தெறிக்க நடித்திருக்கிறார். ஏனோ எமோஷ்னல் காட்சிகளில் மிகவும் வீக்காக இருக்கிறார். நம்மை நடுங்க வைக்கும் வில்லன் கேரக்டர் ஆர்யாவிற்கு. அந்த கம்பீர பயங்கரம் ஆர்யாவிடம் வெளிப்படவே இல்லை. இந்தப்படத்துக்கு எதுக்கு ஹீரோயின்? பிரகாஷ்ராஜ் தம்பிராமையா இருவரும் தங்கள் அனுபவத்தால் அவர்களின் காட்சிகளை கூர்மையாக்கி இருக்கிறார்கள்.
படத்தில் cg காட்சிகள் நன்று. கேமரா டிப்பார்ட்மெண்டும் நல்ல உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். சாம் cs பின்னணி இசையில் ஓரளவு மெனக்கெட்டிருக்கிறார். படத்தில் பத்தல பத்தல என ஒருபாடல் வருகிறது. நமக்கும் பாடல்களில் இண்டர்ஸ்டிங் பத்தல பத்தல என்றே தோன்றுகிறது.
மொத்தத்தில் இவர்கள் யாருக்கு எனிமி?
ஆடியன்ஸுக்குத் தான்
2/5