கவினின் புதியபடம் லிப்ட்

Get real time updates directly on you device, subscribe now.


ஒரு பாசிட்டிவான வார்த்தையில் டைட்டில் இருப்பது படத்திற்கே பாசிட்டிவாக இருக்கும். லிப்ட் என்ற டைட்டில் அப்படியொரு பாசிட்டிவ் எனர்ஜியைக் கொண்டுள்ளது. ஈகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் லிப்ட் படத்தை ஹேப்ஸி தயாரிக்கிறார். படத்தின் கதையை வெகு வித்தியாசமாக எழுதி இயக்கி இருக்கிறார் வினித் வரபிரசாத். இவர் விளம்பரப் படங்கள் மூலம் பெரிதும் கவனம் பெற்றவர்.

பிக்பாஸ் மூலம் தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்ட கவின் பிக்பாஸில் இருந்து வெளிவந்த உடன் நாயகனாக நடிக்கும் முதல்படம் இது. கவின் ஜோடியாக நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார். மேலும் படத்தில் நடித்துள்ள மற்ற நடிக நடிகையர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது.