செங்குலம் படத்தின் அப்டேட்!

Get real time updates directly on you device, subscribe now.

கண்ணன் ரவி குழுமம் (Kannan Ravi Group) சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘செங்குலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. வித்தியாசமான உருவாக்கத்துடன் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

கண்ணன் ரவி குழுமம் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களைப் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருவதுடன், புதிய திறமையாளர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறது. அந்த வகையில், அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

டைட்டில் போஸ்டரில், ரத்தம் தேய்ந்த வேல்கம்பு, அதைச் சுற்றியுள்ள சிவப்பு நிறத் துணிகள் மற்றும் கரிசல்மண், புழுதி, இரத்தம் எனப் படத்தின் ‘செங்குலம்’ என்ற தலைப்புக்கு ஏற்ற வகையில் அதிரடியான தோற்றம் இடம்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து வெளியாகியுள்ள
இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், காஷ்மீரிலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் 2027-ம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.