Lik- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

காதலர்களுக்கு என கண்டுபிடிக்கப்படும் செயலியால் வரும் விளைவுகளை படம் பேசுகிறது

2040-ஆம் ஆண்டில் எஸ்.ஜே சூர்யா ஒரு App கண்டுபிடிக்கிறார். அதன் பெயர் Lik. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என விரிவாக்க பெயர் அந்தக் கம்பெனியின் செயலிக்கு முதல் முதலில் வாய்ஸ் கொடுத்திருப்பது ஹீரோ பிரதீப் ரங்கநாதன். பிரதீப் ரங்கநாதனின் அப்பா சீமான் போன்கள் இல்லாத உலகமே சிறந்தது என ஒரு ஆர்கானிக் சிறைச்சாலையே நடத்துகிறார். போன்களால் பிறருக்கு தீமை செய்தவர்களை இந்த போனில்லா சிறைக்கு கொண்டுவருவார் அவர். அவரின் மகனான ஹீரோ பிரதீப்பிற்கு போன் இருந்தால் தான் ஆச்சு என்ற நிலை வருகிறது. அந்த நிலையை ஒரு காதல் தருகிறது. ஆனால் எஸ்.ஜே சூர்யாவின் App அந்தக்காதலை பிரிக்கிறது. அதனால் காண்டாகும் பிரதீப் அந்த app-ஐ முடக்க முயற்சிக்கிறார். அதற்கு எஸ்.ஜே சூர்யா எடுக்கும் முடிவு என்ன? என்பது மீதிக்கதையாக விரிகிறது

ஆக்‌ஷன் எமோஷன் காமெடி என எல்லா ஏரியாவிலும் கில்லியாகி விட்டார் பிரதீப் ரங்கநாதன். நல்ல ஸ்கோரிங் ஸ்கிரீனில் அவருக்கு. சீமான் கேரக்டர் எதிர்பார்த்த இம்பெக்டை தரவில்லை. மிஸ்கின் ஒரு காட்சியில் எதற்கு வந்தாரென்றே தெரியவில்லை. கீர்த்திஷெட்டி ரோலை அநியாயத்திற்கு டம்மியாக்கி வைத்துள்ளனர். எஸ்.ஜே சூர்யா மட்டுமே ஆறுதல். ஆனந்த் ராஜ் கேரக்டரும் ஒகே

அனிருத் படத்தில் தன் இசை மூலமாக மற்றொரு ஹீரோவாக பணியாற்றியுள்ளார். ஒரு ரோபாவிற்கு அவர் குரல் கொடுத்திருப்பது ஸ்வீட் சர்ப்ரைஸ்! ஒளிப்பதிவில் படம் அடுத்தக்கட்ட பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. 2040-ல் படம் நடப்பதால் கேமரா ஆங்கிளில் நிறைய புதுமைகள்

விக்னேஷ்சிவன் வசனங்களில் ஈர்த்த அளவிற்கு திரைக்கதையில் ஈர்க்கவில்லை. எந்தக்கேரக்டரும் நம்மோடு கனெக்ட் ஆகவில்லை. பின்பாதி படம் மட்டும் சற்று பரவாயில்லை. காதலின் அளவை கருவிகளால் அளவெடுக்க முடியாது என்ற ஒன்லைன் புதுசு. ஆனால் ட்ரீட்மெண்டில் எந்தப்புதுசுமில்லை
Lik-வீக்
2.5/5