TN2026- விமர்சனம்
தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடிபிடித்துள்ள நிலையில் வெளியாகியுள்ள tn2026 படம்! எப்படி இருக்கு?
குல்கந்த் குமார் என்ற சாதா மனிதனாக வடமாநிலத்திலிருந்து வருகிறார் நட்டி. அவர் நடிகராக இருக்கும் போதே பின்னாளில் அவரால் அரசியலில் சாதிக்க முடியும் என நம்புகிறார் தம்பி ராமையா! நட்டிக்கு கொஞ்சகொஞ்சமாக அரசியல் மோகத்தை கொடுக்கிறார். நட்டியும் அரசியலில் குதிக்க முடிவெடுக்கிறார். அதன்பின் நடக்கும் ட்விஸ்ட்கள் தான் படத்தின் கதை!
நட்டி உடலில் இன்னும் கவனம் செலுத்தவேண்டும் என பல ஷாட்கள் சொல்கிறது. நடிப்பில் நல்ல எனர்ஜியைக் காட்டியுள்ளார். செகண்ட் ஹீரோ ரேஞ்சில் திரையை ஆக்கிரமித்துள்ளார் தம்பி ராமையா! நிறைய பன்ச்கள் மூலம் சிரிக்கவும் வைக்கிறார். எம்.எஸ் பாஸ்கர் கிராமத்து மொழியில் பின்னியெடுத்துள்ளார். இளவரசு, கிங்ஸ்ட்லி காமெடியும் சின்னதாக எடுபட்டுள்ளது. நாயகிகள் யாரும் பெரிதாக வொர்க் ஆகவில்லை!
ஒளிப்பதிவாளர் நிறைய சிக்கனத்தை காட்டினாலும் ப்ரேம்களில் அவை பெரிதாக தெரியவில்லை. சில காட்சிகளை பிரம்மாண்டமாகவே அமைத்துள்ளார். தர்புகா சிவா இசையில் பாடல்கள் ஹிட் மெட்டிரியல் இல்லையென்றாலும், பின்னணி இசையில் ஸ்கோர் செய்துவிடுகிறார்
படத்தின் கதை வசனத்தை தம்பி ராமையா எழுத, திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் உமாபதி! முன்பாதியில் படம் கலகலவென நகர்கிறது. விஜயை மட்டுமல்ல இன்னும் பலரையும் படத்தில் சின்னதாக ட்ரோல் செய்துள்ளனர். பின்பாதியில் கட்சிகளின் கூட்டணி குழப்பங்கள் போல திரைக்கதையில் நிறைய குழப்பங்கள்! ஸ்ட்ராங்கான முடிவு படத்தில் இல்லாததும் பெருங்குறை! அதே சமயம் பெரும்பாலும் போராடிக்காமல் படம் நகர்கிறது. அதனால் தியேட்டருக்குள் நம்பிச்செல்லலாம்
3/5