மாலை நேரத்து மயக்கம் – விமர்சனம்
Rating : 3.8/5
‘இரண்டாம் உலகம்’ இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் எழுத்தில் ரிலீசாகியிருக்கும் படம்.
இயக்கம் அவருடைய மனைவி கீதாஞ்சலியாக இருந்தாலும் முழுப்படமும் செல்வராகவனின் இன்னொரு புதுப்படத்தைபார்த்து விட்டு வந்த உணர்வையே தருகிறது.
செல்வாவின் முந்தைய படங்களில் ஒன்றான ‘7 ஜி ரெயின்போ காலனி’ படத்தில் வருவாரே ரவி கிருஷ்ணா? சாட்சாத் அவரைப் போலவே இந்தப் படத்தின் ஹீரோ கேரக்டரையும் வடிவமைத்திருக்கிறார் கீதாஞ்சலி.
ஏற்கனவே பிரஸ்மீட்ல சொன்னமாதிரி இது ரொம்ப சென்சிடீவ்வான ஸ்டோரி தான். ஆனால் அதை ப்ளே பண்ணிருக்கிற விதம் கைதட்டல்களை அள்ளுகிறது.
காட்சியமைப்புகள்ல இருக்கிற ரிச்னஸ், வசனங்கள்ல இருக்கிற போல்ட்நஸ் இவையெல்லாம் இப்போது இருப்பது ஒரு மெச்சூர்டான சோசைட்டி என்கிற உண்மையை கண் முன்னே காட்சிகளாக காட்டுகிறது.
மேரேஜுக்கு முன்னாடி லவ், டேட்டிங் இதெல்லாம் தப்பே இல்லைன்னு நெனைக்கிற ஹீரோயின்! மேரேஜூக்கு அப்புறம் தான் சின்னச் சின்ன சீண்டல்கள் உட்பட எல்லாமேன்னு நெனைக்கிற ஹீரோ!! இவங்க ரெண்டு பேரையும் குடும்பச் சூழல் திருமண பந்தத்தில் ஒன்றிணைக்க, அதன்பிறகான அவர்கள் வாழ்க்கை பூ பாதையா? அல்லது முள் பாதையா? என்பதே கிளைமாக்ஸ்.
ஹீரோவாக வரும் பாலகிருஷ்ணா கோலா நல்ல பாத்திரத் தேர்வு. ”நான் படிச்சது, வளர்ந்தது, பழகினது எல்லாமே ஆம்பளப் பசங்க தான். அதனால தான் உன்னை என்னால புரிஞ்சிக்க முடியல” என்று ஆரம்பித்து தன் மனைவியை கடைசி வரை உருகி உருகி காதலித்து உயிரை விடுவதும் வரையிலான அவரது கேரக்டர் ரசிகர்களை ‘உச்’ கொட்ட வைக்கிற அப்பாவித்தனம் நிறைந்த கனமான கேரக்டர்!
நாயகியாக அறிமுகமாகியிருக்கும் வாமிகாவுக்கு இந்தப்படம் உண்மையிலேயே சரியான எண்ட்ரி. முதல் படத்திலேயே கோபம், அழுகை, ஈரோ, திமிர், எரிச்சல் என எல்லா உணர்வுகளையும் இயல்பாக வெளிக்காட்டி கைதட்டல்களை அள்ளுகிறார். அதேபோல டயலாக் உச்சரிப்பிலும் லிப் மூவ் மெண்ட்டிலும் சரியாகச் செய்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகள் ஒவ்வொன்றும் ரம்மியம், அம்ரித்தின் இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை என்றாலும் பின்னணி இசையில் ஈரானியப் படங்களில் இருக்கும் யதார்த்தத்தை கொண்டு வந்து அழகு சேர்த்திருக்கிறார்.
கணவனும், மனைவியும் ஒன்றாக உட்கார்ந்து சரக்கடிப்பது, செக்ஸைப்பற்றி அம்மாவே மகளிடம் எந்த தயக்கமும் இல்லாமல் பேசுவது என இன்னும் இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளத் தயங்கும் பல காட்சிகள் படத்தில் உண்டு. கண்டிப்பாக கணவன், மனைவியாக இந்தப்படத்தைப் பார்க்கலாம், ஆனால் தயவு செய்து குழந்தைகளுடன் செல்வது நல்லதல்ல.
காமெடி, அதிரடி சண்டைக்காட்சிகள் என கமர்ஷியல் படங்களுக்குரிய எஸ்க்ட்ரா பிட்டிங்குகள் இல்லை. கணவன் – மனைவிக்கிடையே இருக்கும் ஆழமான காதலை அழகாக பார்த்து ரசித்து விட்டு வரலாம்.
பொதுவாகவே தமிழ்சினிமாவில் பெண் இயக்குநர்கள் என்றால் ஃபேமிலி, லவ், குழந்தைகள் போன்ற குறிப்பிட்ட இந்தந்த ஜானர்களில் தான் படங்களை இயக்கியாக வேண்டும என்கிற ரெகுலர் கோட்பாடு உண்டு. அந்த கோட்பாடுகளுக்கு தனது கணவர் செல்வராகவனின் ஆதரவுடன் பெரிய சைஸ் பூட்டைப் போட்டிருக்கிறார் கீதாஞ்சலி செல்வராகவன். அவரின் அந்த தைரியத்துக்கும், துணிச்சலுக்கும் ஒரு பிக் சல்யூட்!
மாலை நேரத்து மயக்கம் – கணவன், மனைவி தயக்கம் இல்லாமல் பார்க்கலாம்!