டெரர்ரா ஒரு காம்பினேஷன்! : செல்வராகவன் இயக்கத்தில் ஹீரோவானார் சந்தானம்!

Get real time updates directly on you device, subscribe now.

SELVARAGHAVAN

டைமிங் சென்ஸ், கவுண்டர் காமெடி, நையாண்டி என ஒரு நகைச்சுவை அரசருக்கு தேவையான எல்லா குணங்களும் சந்தானத்திடம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழக மக்களின் சிரிப்பிற்கு சொந்தக்காரரான சந்தானம், நகைச்சுவை மட்டுமின்றி ஒரு வளர்ந்து வரும் வெற்றி கதாநாயகனாகவும் தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவரது நடிப்பில் வெளியான படங்கள் யாவும் தரமான வெற்றியை வர்த்தக ரீதியாகவும், வணீக ரீதியாகவும் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு சான்றாக சமீபத்தில் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ திரைப்படத்தின் வெற்றியை சொல்லலாம்.

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஹீரோவாக வெற்றி பயணத்தை மேற்கொண்டு வரும் சந்தானம், தற்போது இயக்குநர் செல்வராகவனுடன் கைக்கோர்த்திருப்பது, ஒட்டுமொத்த தமிழ் திரை உலகினரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறது. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதும் போல அமைந்த இப்படி ஒரு டெடர்ரான காம்பினேஷன் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை கிளப்பி விட்டிருக்கிறது.

Related Posts
1 of 10

“பொதுவாகவே செல்வராகவன் சார் என்றாலே, ‘சீரியஸான மனிதர் தான்’… அவர் படங்கள் எல்லாம் உணர்ச்சிகரமாக தான் இருக்கும்’… போன்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் அது உண்மையல்ல. செல்வராகவன் சாரிடம் சிறந்த நகைச்சுவை உணர்வு இருக்கிறது. உணர்ச்சிகரமான படங்களாக இருந்தாலும், அந்த நகைச்சுவை உணர்வை அவரது திரைப்படங்களில் நம்மால் உணர முடியும்…”என்கிறார் நடிகர் சந்தானம்.

தமிழ் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுகளை பெற்ற செல்வராகவனின் யாரடி நீ மோகினி திரைப்படம், ஒரு சிறந்த
காமெடி – எமோஷன் படமாக இன்றளவும் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த படத்தின் தெலுங்கு பதிப்பான ‘ஆடவரி மாட்டலாகு அர்த்தாளே வேருளே’ திரைப்படம், தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் அமோக பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இப்படி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தரக்கூடிய விதத்தில் அமைந்திருக்கும் சந்தானம் – செல்வராகவன் கூட்டணியானது, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என்பதை உறுதியாகவே சொல்லலாம்.