எஸ்.ஜே. சூர்யா – கெளதம் மேனன் – செல்வராகவன் – வெவகாரமான கூட்டணி!

எஸ்.ஜே.சூர்யா ஹீரோ, செல்வராகவன் டைரக்ஷன், கெளதம் மேனன் தயாரிப்பு!
இப்படி ஒரு ‘காம்போ’ வில் ஒரு படம் வந்தால் எப்படி இயிருக்கும்?
அந்த அனுபவத்தை தமிழ்சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல தெலுங்கு சினிமா ரசிகர்களும் அனுபவித்தே தீர வேண்டிய காலகட்டம் வந்து விட்டது போலும்!
மூன்று பேருமே ஒரு காலத்தில் ஆஹோ ஓஹோ வென்று ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்ட இயக்குநர்கள் தான்.
ஒருவருக்கு ஹீரோ ஆசை வர அத்தோடு அவருடைய இயக்கம் சுணக்கம் கண்டது. அடுத்தவருக்கு எடுப்பது ஹாலிவுட் படம் என்கிற ரேஞ்சிலேயே பட்ஜெட்டை பல கோடிகளுக்கு கொண்டு வந்த நிப்பாட்டி படமும் சில கோடிகளைக் கூட தேற்றாததால் புதுப்பட வாய்ப்புகள் வரவில்லை.
மூன்றாமவரோ சொந்தக் காசிலேயே சூனியம் வைத்த கதையாக காலம் காலமாக அரைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காதல் படத்துக்குப் போய் கோடிகளை கொட்டி எடுக்க அதுவும் தேறாத கேஸாகி விட்டது.
இப்படி மூன்று திறமையான இயக்குநர்களும் ஏதோ ஒரு வகையில் உணர்ச்சிவசப்பட்டு அடுத்த படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்காமல் இப்போது மூவர் கூட்டணியில் ஒரு தமிழ் – தெலுங்கு இருமொழிப்படமாக ஒரு படம் தயாராகப் போகிறதாம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை. அப்படிப்பட்டவர்கள் எப்படி ஒரே படத்தில் மிங்கிள் ஆகப்போகிறார்கள்? என்பதைத் தான் கோடம்பாக்கமே கவலையோடு உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
வெவகாரமான கூட்டணி வெளங்கினா பீல்டுக்கு நல்லது அம்புட்டுத்தான்!