இந்தப் படத்திலும் ஜோடி இல்லை! : என்னடா இது மாதவனுக்கு வந்த சோதனை?

இளம் பெண்களின் கனவு ஹீரோவாக இருந்த மாதவனுக்கு தமிழில் சரியான படங்கள் அமையாததால் பாலிவுட்டுக்குப் போனார்.
அங்கு போனவர் தமிழ்நாட்டுப் பக்கமே எட்டிப்பார்க்கவில்லை.
ஒரு நல்ல படம் அமைந்தால் மீண்டும் தமிழில் ஒரு ரவுண்டு வரலாம் என்று நினைத்த போது தான் தமிழில் ‘இறுதிச்சுற்று’ திரைப்படம் சென்ற ஆண்டு சரியான ரீ – எண்ட்ரி படமாக அமைந்தது. மாதவன் – ரித்திகா சிங் நடிப்பில் ரிலீசான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு வசூலையும் வாரிக்குவித்தது.
படத்தில் ரித்திகாவுக்கும், மாதவனுக்கும் டூயட் இல்லை என்றாலும் மாதவனின் கேரக்டர் ரசிகர்களுக்கு பிடித்துப் போனது.
நல்ல எண்ட்ரி கிடைத்திருப்பதால் அதை தக்க வைத்துக் கொள்ள ஆசைப்பட்ட மாதவன் இப்போது தமிழ்ப்படங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.
அந்த வகையில் விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் இணைகிறார். கூடவே இன்னொரு ஹீரோவாக இதில் துல்கர் சல்மானும் நடிக்கிறார். மூன்று ஹீரோக்கள் படமாக இருந்தாலும் கவலைப்படாத மாதவன் இன்னொரு விஷயத்திலும் கவலைப்படவில்லையாம்.
ஆமாம், எப்படி ‘இறுதிச்சுற்று’ படத்தில் ஜோடி இல்லாமல் கட்டப்பிரம்மச்சாரியாக வந்தாரோ? அதே போல இந்தப் படத்திலும் ஜோடியே இல்லாமல் தான் வருகிறாராம் மாதவன்.
என்ன கொடுமை மாதவன்?