ஒரு மகளுக்கும், தாய்க்கும் இடையேயான பந்தத்தை கூறும் “மஹா”!

Get real time updates directly on you device, subscribe now.

Etcetera Entertainment சார்பில் திரு மதியழகன் மற்றும் Malik Streams Corporations (Production & Distribution) சார்பில் தத்தோ அப்துல் மாலிக், முகம்மது ஜுபையர் மற்றும் ராசிக் அஹமத் ஆகியோர் தயாரிப்பில் நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அவரது 50 வது திரைப்படமாக உருவாகியுள்ள படம் “மஹா”. இயக்குநர் U.R. ஜமீல் இயக்கத்தில் நடிகர் STR சிம்பு மிக முக்கியமான கேமியோ பாத்திரத்தில் நடிக்க, நடிகர் ஶ்ரீகாந்த் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு பரபர திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது.

Related Posts
1 of 7

இவ்விழாவினில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் K ராஜன் பேசியதாவது..,
மஹா திரைப்படம் ஒரு மகளுக்கும், தாய்க்கும் இடையேயான பந்தத்தை கூறும் படம். இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பாப பங்களிப்பை கொடுத்துள்ளனர். இயக்குனர் சிறப்பான திரைப்படத்தையும், ஒரு முக்கியமான கருத்தையும் தந்துள்ளார். நடிகர் சிம்பு சிறந்த நடிகர், அவர் இந்த படத்தில் சிறப்பான நடிப்பினை வழங்கியுள்ளார். இந்த படம் மெஹா ஹிட் அடிக்க வாழ்த்துகிறேன். படம் நிச்சயம் பெரிய வெற்றியடையும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.