அப்படிப்போடு! : வாய்ப்புக்காக காதலனை கழட்டி விட்ட கமல் மகள்!

Get real time updates directly on you device, subscribe now.

akshara

இது காதலிக்கிற வயசா என்று கேட்டால் கூட ஆமாம் நாங்க ரெண்டு பேரும் மேஜர் தான் அதனால் காதலிக்கிறோம் என்று சொல்லியிருப்பார்கள் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசனும், முன்னாள் மாஜி நடிகை ரதியின் மகன் தனுஜூம்.

இவர்கள் இருவரும் தான் இப்போது ஹிந்தியில் நடிக்கப் போன இடத்தில் நட்பாகி, காதலில் கட்டுண்டார்கள்.

அக்‌ஷரா ஹிந்தியில் அறிமுகமான ஷமிதாப் படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. அதே போல தனுஜ் நடித்த லவ் யு சோனியாவும் தோல்வி தான்.

இது போதாதா காதலனை கழட்டி விட, “ நடிப்பில் கவனம் செலுத்துவதை விட டேட்டிங்கில் தான் கவனம் செலுத்துகிறாய், அதனால் தான் நீ நடிக்கிற படமும் தோல்வியைத் தழுவுகிறது.

எந்த புதுப்பட வாய்ப்புகளும் அமையாமல் போகிறது என்று அட்வைஸ் பறந்திருக்கிறது அக்‌ஷராவுக்கு. அம்புட்டுத்தான் தனுஜ் உடன் காதலுக்கு குட்பை சொல்லிவிட்டு இனி நடிப்பே முக்கியம் என்கிற முடிவுக்கு வந்து விட்டார் அக்‌ஷரா.

பாவம் தனுஜ், அக்‌ஷராவுடன் பிரேக்கப் ஆனதில் ரொம்பவே நொந்து போயிருக்கிறாராம்.