‘விஸ்வரூபம்-2’ டிரெய்லர் ரிலீஸ் எப்போது? – அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கமல்

Get real time updates directly on you device, subscribe now.

‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்த நடிகர் கமல் சில மாதங்களாக அதன் ஆரம்பக்கட்ட வேலைகளில் பிஸியாக இருந்தார்.

தற்போது அந்த வேலைகள் முடிந்த நிலையில் மீண்டும் தனது சினிமாத் தொழில் பக்கம் பார்வையை திருப்பியிருக்கிறார்.

ஏற்கனவே அவர் நடித்து, இயக்கியிருக்கும் விஸ்வரூபம் 2 திரைப்படம் எப்போது ரிலீசாகும் என்று பலரும் எதிர்பார்த்திருந்திருந்தனர்.

Related Posts
1 of 18

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்பப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிவடைந்து படத்துக்கு சென்சாரில் ‘U/A’ சான்றிதழ் கிடைத்த நிலையில் நேற்று அந்தப்படம் சம்பந்தமாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

ஆமாம், இப்படத்தின் டிரெய்லர் வரும் ஜூன் 11ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக கமல் தனது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த டிரெய்லரை தமிழில் ஷ்ருதிஹாசன், இந்தியில் அமீர் கான் மற்றும் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் வெளியிட உள்ளனர்.

கமல் அரசியலுக்கு நுழைந்த பிறகு ரிலீசாகப் போகும் முதல் படம் என்பதால் விஸ்வரூபம் 2 படத்துக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.