மக்களை ராப்பிச்சைக்காரன் ஆக்கி விட்டார்! : மோடியை சாடிய மன்சூர் அலிகான்
மோடி வந்தால் சேஞ்ச் வரும் செஞ்ச் வரும்னு சொன்னாங்க, ஆனா சேஞ்சுக்கே சேஞ்ச் வந்துருச்சே…
இப்படியெல்லாம் மீம்ஸ்களை போட்டுத்தாக்குகிறார்கள் சமூகவலைத்தள புலிகள்.
கடந்த 8-ம் தேதி இரவு திடீரென்று 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தாலும் அறிவித்தார் வழக்கம் போல இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு தெருவில் நின்று கொண்டிருப்பவர்கள் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தான்.
நாடு முழுவதும் இன்னும் தீராத தலைவலியாக இருக்கும் இந்தப் பிரச்சனையைப் பற்றி இன்று நடந்த ‘கொஞ்சம் கொஞ்சம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் வெளுத்துக் கட்டினார் நடிகர் மன்சூர் அலிகான்.
“500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுன்னு ஒரு இரவுல அறிவித்த பிரதமர் எல்லா மக்களையும் ராப்பிச்சைக்காரன் ஆக்கிட்டார். நெறைய பேர் பிரதமரோட இந்த நடவடிக்கையை வரவேற்றாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது சாதாரண மக்கள் தான்.
அவரால 5 நாட்களா சினிமாத்துறை முடங்கிப்போய் கிடக்கு. தியேட்டர்கள் எல்லாம் காலியா இருக்கு. புதுப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் கலெக்ஷன் இல்லை. இந்த இழப்புக்கு யார் பதில் சொல்வாங்க. இதை எதிர்த்து எல்லாரும் போராடணும்.
அப்புறம் பழைய 500 ரூபாய் நோட்டுகள் கூட ரொம்ப அழகா இருந்துச்சு. புது 2000 ரூபாய் நோட்டைப் பார்த்தா ஏதோ ஷூட்டிங் ஸ்பாட்ல டூப்ளிகேட் நோட்டுகளை பயன்படுத்துற மாதிரி ரொம்பச் சீப்பா இருக்கு. பேசாம இந்த 2000 நோட்டுக்களை நம்ம சினிமா ஆர்ட் டைரக்டர்கள்கிட்ட கொடுத்திருந்தா சூப்பரா டிசைன் பண்ணிக் கொடுத்திருப்பாங்க.” என்று மோடியை கடுமையாக சாடினார் மன்சூர் அலிகான்.
அதுக்கெல்லாம் அசர்ற ஆளா மோடி?