சூரரைப் போற்றுவை பின் பற்றாத மாஸ்டர்
சூர்யாவின் சூரரைப்போற்று படம் அமேசானில் வெளியாக இருப்பதைத் தொடர்ந்து பலரது பார்வையும் விஜய்யின் மாஸ்டர் படத்தை நோக்கித்தான் இருக்கிறது. பெரிய பட்ஜெட் படமான சூரரைப்போற்று ஓடிடியில் வெளியாவதால் மாஸ்டருக்கும் அதற்கான சாத்தியமுண்டு என்பதே பலரின் கணிப்பு. ஆனால் மாஸ்டர் படத்தின் தயாரிப்புத் தரப்பில் படத்தைத் தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அந்த உறுதிக்கு வலு சேர்ப்பதைப் போல இன்று பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் “மாஸ்டர் தியேட்டரில் தான் ரிலீஸ் ஆகும்” என்று சொல்லியிருக்கிறார்.