‘மாயவன்’ படத்தில் டைரக்டரானார் தயாரிப்பாளர் சி.வி.குமார்!
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் பல வித்தியாசமான படங்களைத் தயாரித்தவர், தயாரித்துக் கொண்டிருப்பவர் தயாரிப்பாளர் சீ.வீ.குமார்.
வித்தியாசமான படங்களைத் தயாரித்து பல புதிய இயக்குனர்களையும் உருவாக்கிய சீ.வீ.குமார் தற்போது ‘மாயவன்’ படம் மூலம் இயக்குனராக புதிய அவதாரமெடுத்துள்ளார்.
இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுந்திப் கிஷன் நாயகனாகவும், லாவன்யா திரிபாதி நாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி நடிக்க, உடன் பகவதி பெருமாள் (பக்ஸ்), ஜெ பி, மைம் கோபி, பாபு ஆண்டனி ஆகியோர் நடிக்கின்றனர்.
அனைத்து ரசிகர்களையும் கவரும் விதத்தில் இந்தப் படம் தயாராக உள்ளது.
கே.ஈ. ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது. ஜிப்ரான் இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய லியோ ஜான் பால் படத் தொகுப்பு செய்கிறார்.
சென்னையில் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கிய படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற உள்ளது.