கொஞ்சம் கூட அலட்டல் இல்லை! : இஷா தல்வாரை புகழ்ந்து தள்ளிய புதுமுக நாயகன்!

Get real time updates directly on you device, subscribe now.

meendum

‘​தட்டத்தின் மரியத்து’ படத்தின் ரீமேக் படமான ‘மீண்டும் ஒரு காதல் கதை’ படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் இன்று சென்னையில் நடைபெற்றது.

விழாவில் நாயகன் வால்டர் பிலிப்ஸ், நாயகி இஷா தல்வார், அர்ஜுன், வெங்கட், எடிட்டர், தியாகராஜன், இயக்குநர் மித்திரன் ஆர். ஜவகர், தயாரிப்பாளர் எஸ்.வி.டி. ஜெயசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகன் வால்டர் பிலிப்ஸ், படத்தில் பணியாற்றிய ஒருவரை விடாமல் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் படத்தை பற்றிய நிறைய விஷயங்களை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது,

ரொம்ப நாளா ஒரு நல்ல கதைக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். எனக்காக தாணு சார் நிறைய ஸ்க்ரிப்ட் அனுப்பினார். விஜய்யை விட உனக்கு தான் அதிகமாக ஸ்க்ரிப்ட் அனுப்பிருக்கேன் எதுவுமே பிடிக்கலையா எனக் கேட்டார். பிறகு நானே இந்த படத்தோட ஸ்கிரிப்ட் பிடிச்சிருக்கு என தாணு சார் கிட்ட சொன்னேன். உடனே எதுவுமே சொல்லாம உனக்கு பிடிச்சிருக்குல கண்டிப்பா நல்லா இருக்கும் பண்ணு என உற்சாகப்படுத்தினார்.

அடுத்து சங்கிலி முருகன் அவருக்கும் நன்றி சொல்லணும். அவர் இந்த படத்துக்காக நிறைய பண்ணிருக்காரு. இந்த வயசுலயும் இவ்ளோ என்னர்ஜியா இருக்காரு. இயக்குநர் ஜவகர், நான் ஒரு புது ஹீரோ என ஒரு நாளும் நினைக்கவில்லை. எவ்வளவு ப்ரீடம் கொடுக்க முடியுமோ அவ்ளோ கொடுத்தார். அவருக்கு நன்றி சொல்லணும். மேலும் கேமராமேன் விஷ்ணு அவ்வளவு அழகா ஒளிப்பதிவு செஞ்சிருக்கார்.

இஷா தான் இந்த படத்துல நடிக்கனும் முன்னவே பிக்ஸ் பண்ணிட்டோம். ஆனா அவங்க நடிக்க ஒத்துப்பாங்களானு ஒரு டவுட். நிறைய பேரை ஆடிசன் வச்சோம். ஆனா ஒருத்தர் கூட செட் ஆகலை. வேற வழியில்லாம இஷாகிட்டவே கேட்டோம். முதல்ல ஒரு சின்ன தயக்கம் அவருக்கு. என் கூட நடிக்கனுமான்னு, பிறகு சரின்னு சொல்லிட்டாங்க. ஒரு புது ஹீரோவோட நடிக்கிறோம்னு எந்த ஒரு அலட்டலும் இல்லை. அவ்வளவு நன்றாக பழகினார்.

இயக்குநர் ஜவகர் பேசியதாவது, முதல்ல தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன் பத்திதான் சொல்லணும். இப்படி ஒரு அன்பானவர நான் பார்த்ததே இல்லை. அவ்வளவு நன்றாக பழகக்கூடியவர். தாணு சார் இந்த படத்தை பண்ணுறார்னு சொன்னதுமே எனக்கே ஆச்சரியம். அவரு பேரை பெரிய பெரிய படத்தோட பேனர்ல பார்த்துட்டு, இப்போ நம்ம படத்தோட பேனர்ல பாக்கும்போது ஒரு நம்பிக்கை வந்திடுச்சு. தாணு சாருக்கும் நன்றி சொல்லணும்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் போது சொல்லிட்டே இருப்பாரு. யாரடி மோகினி படத்துல வர்ற, எங்கேயோ பார்த்த மயக்கம் பாடல் மாதிரியே, இந்த பாட்டையும் எடுக்கணும் சொல்லிட்டே இருப்பார். கண்டிப்பா எடுக்குறேன்னு சொல்லி அவர்கிட்ட இசையை வாங்குனேன்.

மலையாள படத்தை அப்படியே ரீமேக் பண்ணலை, அது ரொம்ப போர். தமிழுக்கு என்ன தேவையோ அத எல்லாம் சேர்த்து எடுத்துருக்கேன். இதுக்கு முக்கிய காரணம் என்னோட கோ டைரக்டர் ஜீவன் தான். அவரு இந்த படத்துக்காக என்னோட சேர்ந்து நிறைய உழைச்சிருக்காரு. மேலும் என்னோட உதவி இயக்குனர்களுக்கும் நன்றி. கேமரா மேன் விஷ்ணுவுக்கும் நன்றி எனக்கூறினார்.