மிரட்ட வரும் ‘மெட்ரோ’ ஹீரோ சிரிஷ்!

Get real time updates directly on you device, subscribe now.

Metro-1

‘அதுக்கெல்லாம் முக அமைப்பு வேணுங்க…’ என்று சொல்வார்களே? அப்படி ஒரு ஆக்‌ஷன் முக அமைப்போடு தான் முதல் படத்திலேயே களமிறங்கியிருக்கிறார் சிரிஷ்.

‘ஆள்’ படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் தயாராகும் இரண்டாவது படமான ‘மெட்ரோ’வில் இவர் தான் ஹீரோ!

லயோலா காலேஜ்ல விஸ்காம் முடிச்சேன். சினிமாதான் கனவுங்கிறதெல்லாம் இல்ல. அதுல போய்ப்பார்க்கணும்ங்கிற ஆசை மனசுக்குள்ள இருந்துச்சு. ஆனா இந்தப் படத்துல நடிச்சி முடிச்ச உடனே சினிமா எனக்கு ரொம்ப பிடிச்ச கேரியராயிடுச்சு.

என்று சொல்லும் சிரிஷ் ‘மெட்ரோ’ முழுக்க ஆக்‌ஷன் சீன்களில் அட்ராசிட்டி செய்கிறார். அவருக்கு ஜோடி ‘மாயா’ என்கிற அழகுப்பதுமையாம். இன்னொரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் பாபி சிம்ஹா.

முதல் படமே ஒரு பெரிய டைரக்டரை தேடிப்போகாம கிட்டத்தட்ட புதுமுகம் ரேஞ்சில இருக்கிற இயக்குநரை செலக்ட் பண்ணினது ஏன்?

நான் அதையெல்லாம் பார்க்கல. டைரக்டரோட குவாலிட்டி, ஸ்டோரி வேல்யூவ் இந்த ரெண்டு விஷயங்களை மட்டும் தான் பார்த்தேன். ஆனந்த் கிருஷ்ணன் சார் இயக்கின ‘ஆள்’ படத்தைப் பார்த்தப்போ கதையாகவும், மேக்கிங்காகவும் நல்லா மெரட்டியிருந்தார். அதைப் பார்த்ததும் அவரோட டைரக்‌ஷன் மேல நம்பிக்கை வந்துச்சு. இப்போ ‘மெட்ரோ’வை முடிச்சாச்சு.

'மெட்ரோ' படத்தில் சிரிஷ், மாயா
‘மெட்ரோ’ படத்தில் சிரிஷ், மாயா

இன்னைக்கு மக்களோட மோகப் பொருட்கள்ல முக்கியமான பொருள் ‘தங்கம்’. தங்கம் எங்கெல்லாம் இருக்கோ அந்த இடங்களில் எல்லாம் கதை நகரும். ஒரு நடுத்தர இளைஞனோட வாழ்க்கையில் இந்த தங்கத்தால என்னென்ன ஃசேஞ்சஸ் வருதுங்கிறதைப் பத்தி தான் த்ரில்லரா சொல்லியிருக்கோம். படம் செம விறுவிறுப்பா இருக்கும். இதுல தங்கத்தைப் பத்தி மக்களுக்கு தெரியாத பல விஷயங்களை சொல்லியிருக்கிறார் டைரக்டர்.

ட்ரெய்லரை விஜய் சேதுபதி, சிம்பு, கார்த்தி, விஷால்னு முன்னணி ஹீரோக்கள்கிட்ட போட்டுக்காண்பிச்சோம், பார்த்தவங்க எல்லோருமே சொன்னது. மேக்கிங் சூப்பரா இருக்கு. குறிப்பா கேமரா ஒர்க் பெர்பெக்ட்னாங்க… சிம்பு என்னோட பெஸ்ட் பிரெண்ட் ட்ரெய்லரைப் பார்த்துட்டு நீ தேறமாட்டேன்னு நெனைச்சேன். ஆனா ட்ரெய்லரைப் பார்த்த உடனே கண்டிப்பாக ஜெயிப்பேங்கிற நம்பிக்கை வந்துடுச்சுன்னு சொன்னார்.

என்ற சிரிஷுக்கு இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் உடனே வாய்ப்பு கொடுத்து விடவில்லையாம்!

ஆமாம் சார், அவர் அடுத்த படத்துக்கு ஹீரோ செலக்ட் பண்ணிக்கிட்டு இருக்கார்னு கேள்விப்பட்டேன். நடிச்சுக் காட்டச் சொன்னார். நடிச்சுக் காண்பிச்சேன். அப்புறம் தான் என்னோட நடிப்பு

மேல நம்பிக்கை வந்து அப்பாகிட்ட பேசி படமே ஸ்டார்ட் ஆச்சு.

சிரிஷின் இந்த தேர்ந்த நடிப்பின் பின்னணியில் இருந்தது கூத்துப்பட்டறையிலிருந்து வந்த நடிகை கலைராணியும், ஸ்டண்ட் மாஸ்டர் பாண்டியனும் தான். கலைராணியிடம் நடிப்பையும்,

பாண்டியன் மாஸ்டரிடம் ஆக்‌ஷனையும், கிரிஜா டான்ஸ் மாஸ்டரிடம் நடனத்தையும் கற்றுத் தேர்ந்திருக்கிறார் சிரிஷ்.

இந்த ப்ளான் போதுமே இன்னும் பத்து வருஷத்துக்கு நின்னு ஆடுறதுக்கு..!

‘ஆல் த பெஸ்ட்’ சிரிஷ்!