தங்கர்பச்சானை தவிக்க விட்டாரா பிரபுதேவா? : அதுவும் ஒரு வகையில நல்லதுக்கு தான்!
பிரபுதேவாவை வைத்து ‘களவாடிய பொழுதுகள்’ படத்தை இயக்கினார் ஒளி ஓவியர் தங்கர்பச்சான்.
படம் முடிந்து கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஆகியும் இன்னும் ரிலீசாகவில்லை. அந்தப்படம் எப்போது ரிலீசாகும் என்று யாருக்கும் தெரியவில்லை.
அது ஆகுமா? ஆகாதா? என்கிற தேடலுக்குள் நாம் போகத் தேவையில்லை.
அப்போது பிரபுதேவாவுடன் ஏற்பட்ட நெருக்கமான நட்பை இன்றும் தொடர்கிறார் தங்கர்பச்சான்.
சில மாதங்களுக்கு முன்பு பிரபுதேவா சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார் அல்லவா?
அந்த நிறுவனத்தில் தனது மகனையும் ஹீரோவாகப் போட்டு ஒரு படத்தை தயாரிக்கும்படி நட்பை நம்பி வேண்டுகோள் வைத்தாராம் தங்கர்பச்சான்.
களவாடிய பொழுதே இன்னும் விடியவில்லை அதற்குள் எப்படி தனது நிறுவனத்தோடு தங்கரை இணைத்துக் கொளவது என்று யோசித்த பிரபுதேவா சந்தர்ப்பம் அமையும் போது கண்டிப்பா பண்ணலாம் என்று அன்பாக சொல்லி அனுப்பி விட்டாராம்.
பாசிட்டீவ்வான பதில் வராததால் மகனை அறிமுகப்படுத்த நல்ல நிறுவனம் கிடைக்காமல் தவித்து வருகிறார் ஒளி ஓவியர்.
இந்த விஷயத்தை அரசல் புரசலாகக் கேள்விப்பட்ட பிரபுதேவாவின் சகாக்களும் ஓ அப்படியா..? அதுவும் ஒரு வகையில் உங்களுக்கு நல்லது தான் என்று சொல்லி சிரித்தார்களாம்.