மூன்று நாட்களில் 21 கோடி : வசூல் வேட்டையாடும் ‘மிருதன்’!

சென்ற வெள்ளிக்கிழமை ரிலீசான படங்களில் ஜெயம்ரவி நடித்த ‘மிருதன்’ திரைப்படம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நல்ல வசூலோடு முதலிடத்தில் இருக்கிறது.
ஜெயம்ரவியின் நடிப்பில் இந்த ஆண்டின் முதல் படமாக சென்ற வெள்ளிக்கிழமை பிப்ரவரி 19-ம் தேதி ‘மிருதன்’ திரைப்படம் ரிலீசானது.
2015ம் ஆம் ஆண்டு தொடர்ந்து மூன்று மெகா ஹிட்டுகளைக் கொடுத்த பாக்ஸ் ஆபீஸ் ஹீரோ என்பதால் முந்தையை படங்களை விட உலகமெங்கும் சுமார் 1000 தியேட்டர்களில் ரிலீசானது.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘மிருதன்’ முதல் மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 11 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கிறது. மேலும் உலகம் முழுவதும் சுமார் 21 கோடி ரூபாயை வசூல் செய்திருப்பதாக அந்தப் படத்தின் வெளிநாடுகள் விநியோக உரிமையாளரான அயங்கரன் தெரிவித்திருக்கிறது.
மேலும் வார நாட்களான நேற்றும், இன்றும் கூட ரசிகர்கள் மத்தியில் மிருதனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.
ஹாலிவுட்டில் மட்டுமே வந்து கொண்டிருந்த ஸோம்பி வகை படங்களுக்கு மத்தியில் இந்தியாவிலேயே அதிலும் தமிழில் முதல் முயற்சியாக அந்த ஜானர் படமாக ‘மிருதன்’ வந்திருப்பதால் ரசிகர்களுக்கு புதுவித ரசனையை தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.