புகை, மது காட்சிகள் இல்லாத ஜெயம் ரவியின் ‘மிருதன்’!

Get real time updates directly on you device, subscribe now.

saivam-audio-launch-amala-paul-anushka-vijay-sethupathi-021

நாடோடிகள், கோரிப்பாளையம், பட்டத்து யானை உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த எஸ்.மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட் பட நிறுவனம், தற்போது அதர்வா நடிக்கும் ஈட்டி என்ற படத்தைத் தயாரித்து வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து ஜெயம்ரவி நடிக்கும் ‘மிருதன்’ என்ற படத்தை மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த தனி ஒருவன் படத்தை அடுத்து ஜெயம்ரவி நடிக்கும் படம் இது.

நாணயம், நாய்கள் ஜாக்கிரதை ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி மிருதன் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். ஜெயம்ரவி – லட்சுமிமேனன் இணைந்து நடிக்கும் முதல் படம் இது.

Related Posts
1 of 15

இவர்கள் தவிர, என்னை அறிந்தால் படத்தில் நடித்த பேபி அனிகா, ஸ்ரீமன், காளி வெங்கட், ஆர்.என்.ஆர்.மனோகர், சாட்டை ரவி, கிரேன் மனோகர் மற்றும் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் ஹீரோவான அமித் பார்கவ் ஆகியோர் நடிக்கின்றனர்.

டி.இமான் இசையமைக்க, பாடல்களை எழுதுகிறார் மதன் கார்க்கி. மிருதன் படத்தின் பாடல் பதிவு நடைபெற்று வருகிறது.

கத்தி படத்தில் ஆத்தி பாடலைப் பாடிய விஷால் தட்லானி மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடிய இரண்டு பாடல்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.
மிருதன் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஊட்டியில் 30 நாட்கள் நடைபெற்று முடிந்தது.

அடுத்தகட்டப் படப்பிடிப்பு இம்மாதம் 18 ஆம் தேதி சென்னையில் துவங்கி, தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெற்று, அக்டோபர் மாத இறுதியில் முழுப்படப்பிடிப்பும் முடிவடைகிறது. மிருதன் படத்தில் புகைபிடிப்பது போன்ற காட்சிகளோ, குடிப்பது போன்ற காட்சிகளோ இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் வடகறி படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். கலை – எஸ்.எஸ்.மூர்த்தி, படத்தொகுப்பு: கே.ஜெ. வெங்கட் ரமணன். இவர் ஆடாம ஜெயிச்சோமடா படத்துக்கு படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர். நடனம் – பாபி, சண்டைப்பயிற்சி – கணேஷ். இவர் சிறுத்தை படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர். உடைகள் – ஜாய் கிறிசில்டா
தயாரிப்பு நிர்வாகம் – குமார், சிவகுமார், ராஜ்குமார், மஞ்சு தயாரிப்பு: செராஃபின் சேவியர் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சக்தி சௌந்தர்ராஜன்