விஷ்வநாத் & சன்ஸ்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

விஷ்வநாத் & சன்ஸ்- விமர்சனம்

கருப்பு கொடுத்த வெற்றியைத் தக்க வைப்பாரா சூர்யா?

மிகப்பெரிய பிஸ்னெஸ்மேனான சூர்யா 42 வயதாகியும் திருமணம் முடிக்காமல் இருக்கிறார். அதற்கான காரணம் அவரது அப்பா எடுத்த ஒரு முடிவு. ஆனால் சூர்யாவின் தாயான ராதிகா சூர்யாவிற்கு திருமணம் முடித்து ஒரு பேரனோ பேத்தியோ வேண்டும் என ஆசைப்படுகிறார். அந்த ஆசையை நிறைவேற்றும் பொருட்டு சூர்யா மணமுடிக்காமல் வாடகைத் தாய்மூலம் ஒரு குழந்தையை உருவாக்கி ராதிகாவிடம் தருகிறார். வாடகைத் தாயான மமிதா பைஜு சூர்யா மீது ஒரு பாயிண்டில் காதல்கொள்கிறார். அந்தக் காதலை சூர்யா நிராகரிக்கிறார். அதன்பின் குடும்பத்தில் பல பஞ்சாயத்துக்கள் நடக்கிறது. முடிவு என்ன? என்பது மீதிக்கதை

சூர்யா கதைக்குத் தேவையான நடிப்பை வழங்கியுள்ளார். அவ்வப்போது கஜினி சஞ்சய் ராமசாமியை நினைவூட்டுகிறார். மமிதா பைஜு தான் படத்தின் ரியல் தூண். குட்டிக்குட்டி க்யூட் ரியாக்சன்களால் படத்தைக் காப்பாற்றுகிறார். ராதிகா தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். ஏனைய நடிகர்கள் அனைவருமே கவனம் ஈர்த்துள்ளனர்

ஜிவி பிரகாஷ் ஒரு எமோஷ்னல் பேக்கேஜ் இசையைக் கொடுத்துள்ளார். பாடல்களும் மோசமில்லை. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி விஷுவலில் தரமான அவுட்புட்-ஐ தந்துள்ளார்.

ஒரு குடும்பம் அந்தக் குடும்பத்தின் தேவை, அந்தக் குடும்பத்தின் கடந்தகால பிரச்சனைகள் ஆகியவற்றை கோர்வையாக தொகுத்து முதல் பாதியை கலகலப்பாக நகர்த்தியுள்ளார் இயக்குநர் வெங்கி அட்லூரி. இரண்டாம் பாதியில் நிறைய காட்சிகள் ஆர்கானிக்காக கூடிவரவில்லை. இருந்தாலும் ஒரு Feel drama work ஆகியுள்ளது. So one time watchable movie
3/5