மொத ராத்திரி- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

 

படத்தின் தலைப்பைப் பார்த்தால் இது ஏடாகூட படம் என தோன்றுகிறதல்லவா? ஆனால்..அதான் இல்ல

தென் மாவட்டத்திலுள்ள ஒரு வீட்டில் ஒரு கல்யாண ஏற்பாடு செய்யப்படுகிறது. இரு வீட்டாரும் பரபரப்பாக இருக்கிறார்கள். காரணம் மாப்பிள்ளை பாரினில் இருந்து வரவேண்டும். வரும் மாப்பிள்ளைக்கு அவருக்கு கல்யாணம் என்பது தெரியாது.. இதை எப்படிச் சமாளிக்க என்று குடும்பத்தார் எண்ணும் போது, மாப்பிள்ளை ரிஷிகாந்த் வருகிறார். அவரை கன்வின்ஸ் செய்கிறார்கள். ஆனால் மணப்பெண் தன் காதலனோடு ஓடிப்போக ரெடியாக இருக்கிறார். மாப்பிள்ளை திருமணத்தை வெறுக்க காரணம் என்ன? ஓடிப்போக இருந்த மணப்பெண் என்ன செய்தார்? என்பது படத்தின் மிச்சமுள்ள கதை

நாயகன் ரிஷிகாந்த் இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார். சேத்தனோடு மழைகொட்டும் போது பேசும் ஒரு காட்சியில் பின்னியெடுத்துள்ளார். நாயகி அனிஷ்மா அனில்குமார் இந்தப்படத்தின் பெரும் பில்லர். ஆகச்சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். சேத்தன் ஏற்றுக்கொண்ட கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளார். அப்துல் லீ,பக்ஸ் இருவரின் காம்போ வேறலெவலில் வொர்க் ஆகியுள்ளது. வெங்கடேஷ் அருமையாக நடித்துள்ளார்

பரத் சங்கரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பொருந்தி வந்துள்ளது. சுரேந்திரன் பரஞ்ஜோதியின் ஒளிப்பதிவு காட்சிகளை எதார்த்தமாக காட்டியுள்ளது

கலகலவென பயணிக்கும் முன்பாதியில் நிறைய புதிய காட்சிகள். வில்லேஜ் வசனங்களும் ஈர்க்கின்றன. இரண்டாம் பாதியில் சிலபல சமரசங்கள் திரைக்கதையில் இருந்தாலும் க்ளைமாக்ஸ் பட்டாசு. இப்படியான ஜாலியான படத்தில் சாதியைப் பற்றிய உரையாடலையும் புகுத்தியது இயக்குநர் ராஜா கருப்பசாமி மீதான மதிப்பை கூட்டுகிறது. சின்னச் சின்ன சமரசங்கள் இருந்தாலும் படம் வொர்த்து தான்
3.25/5