பாடலாசிரியர் நா.முத்துக்குமார் வீட்டிற்கு வந்த மற்றுமொரு ‘லட்சுமி’

தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியரான நா.முத்துக்குமாருக்கு நேற்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
வீட்டிற்கு வந்துள்ள மூன்றாவது லட்சுமியாக தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக நா.முத்துக்குமார் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
அவருடைய அம்மாவின் பெயர் சிவ லட்சுமி, மனைவி பெயர் ஜீவ லட்சுமி, எனவே தன்னுடைய பெண் குழந்தைக்கு மகாலட்சுமி என பெயர் சூட்டி இருக்கிறார். அவருக்கு ஆதவன் என்ற மகனும் இருக்கிறான்.