நயன்தாரா இடத்தில் இலியானா? : கை கூடாமல் போன ‘கிக்’ செண்டிமெண்ட்
தமிழில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்த ‘தனி ஒருவன்’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய கடும் போட்டி நிலவியது.
இறுதியாக ராம் சரண் அந்தப் போட்டியில் வெற்றி பெற்று ரீமேக் செய்து நடிக்கும் வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். தமிழில் இயக்கிய இயக்குநர் மோகன் ராஜாவே தெலுங்கிலும் இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்குப் பதில் இப்போது சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார்.
இந்த மாத இறுதியில் படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தாலும், படத்தில் நயன்தாராவின் ஹீரோயின் கேரக்டரில் யாரை நடிக்க வைப்பது? என்கிற குழப்பம் ஹீரோவுக்கும், இயக்குநருக்குமிடையே ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே சுரேந்தர் ரெட்டியின் ‘கிக்’ படத்தில் நடித்தவர் தான் இலியானா. அந்தப்படம் சூப்பர் ஹிட்டானதாலும் கவர்ச்சியான கேரக்டருக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று நம்பியதாலும் அவரையே நடிக்க வைக்க ஆசைப்பட்டார்.
அவரின் இந்த முடிவுக்கு ஹீரோ ராம் சரண் ஓ.கே சொல்லவில்லை. இலியானா என்னுடைய நண்பர் தான் இருந்தாலும் அவரை இந்தப்படத்தில் நடிக்க வைக்க வேண்டாம்.
நான் ஒரு பெரிய ஹிட் கொடுத்தாக வேண்டும், அதற்கு தோதான ஆளாக இலியானா இல்லை. அதனால் வேறு ஒரு புதுமுக நடிகையைப் பாருங்கள் என்று சொல்லி விட்டாராம். வேறு புதுமுகத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
நம்பிப் போன ஹிந்தியில் பட வாய்ப்பு இல்லாமல் தான் மீண்டும் வாழவைத்த தெலுங்கில் வாய்ப்பு தேடி வந்தார் இலியானா, இப்போது அங்கும் அவரை ஓரங்கட்டுவதால் நொந்து போயிருக்கிறார்.
இருக்கிறதை விட்டுட்டு பறக்க ஆசைப்பட்டா இப்படித்தான்!