‘தெரு நாய்’ன்னு தனுஷை திட்டவில்லையாம்! : அப்போ யாரை திட்டினார் சித்தார்த்?
நடிகர் தனுசுக்கு ‘ஹாலிவுட்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த தகவலை தனது ட்விட்டரில் வெளியிட்டார். அவர் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே நடிகர் சித்தார்த்
“நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில இருக்கிற ஒரு தெருநாய்க்கு கிடைக்கும்னு எழுதியிருந்தா அதை யாராலும் மாற்ற முடியாது. #தமிழ் #தத்துவம்” என்று ஒரு கருத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.
தனுஷுக்கு கிடைத்த ஹாலிவுட் பட வாய்ப்பைத்தான் சித்தார்த் விமர்சித்திருக்கிறார் என்று தனுஷ் ரசிகர்களும், திரையுலகினரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.
இந்த சர்ச்சை குறித்து நேற்று ஜில் ஜங் ஜக் படத்தின் புரமோஷன் சந்திப்பில் பேசிய சித்தார்த் தான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றார்.
‘‘ட்விட்டரில் நான் யார் பெயரையும் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை. ‘நாகூர் பிரியாணி’ வசனம் நான் நடித்த தீயா வேலை செய்யணும் படத்தில் இடம்பெற்ற பிரபலமான வசனம். அது எனக்கு பிடித்த வசனம். எனவே தான் நான் அதை என்னுடைய ட்விட்டரில் பதிவு செய்தேன். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. அதை வைத்து கற்பனையான செய்திகள் பரவி உள்ளன. நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லாத நிலையில் உள்நோக்கம், கற்பித்து வெளிவந்துள்ள வதந்திகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
என்றவர் கதாநாயகியே இல்லாமல் ஒரு படத்தை எப்படி தைரியமாக தயாரித்தீர்கள் என்கிற கேள்விக்கு பதிலளிக்கையில் இந்தக் கதைக்கு கதாநாயகி தேவைப்படவில்லை. ஒருவேளை போட்டிருந்தால் இந்தக் கதையின் போக்கு வேறு பாதையில் போயிருக்கும்.
படம் பார்க்க வர்ற ரசிகர்கள் நல்லா ஜாலியா ரசிச்சு சிரிச்சுக்கிட்டு போற மாதிரி காமெடியா இருக்கும். அதேசமயத்துல படத்துல தொழில்நுட்ப ரீதியாகவும் நெறைய விஷயங்களை வெச்சிருக்கோம். ஏன்னா அதெல்லாம் இந்தக் கதைக்கு தேவைப்பட்டது.
‘ஜில் ஜங் ஜக்’ என்பது படத்தில் வருகிற மூன்று முக்கியமான கேரக்டர்களின் பெயர்கள். அதானாலேயே படத்துக்கு அந்த டைட்டிலை வைத்து விட்டோம். இது ஆங்கிலத் தலைப்பு அதனால் வரிச்சலுகை கிடைக்காது என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் நான் வரிச்சலுகையை எதிர்பார்க்கவில்லை என்றார் சித்தார்த்.
தனுஷ் ரசிகர்களே சாந்தமா இருங்கப்பா…