மஞ்சு வாரியர் – பிரபுதேவா இணைந்து பணியாற்றும் ‘ஆயிஷா’ படப்பாடல்!

Get real time updates directly on you device, subscribe now.

‘அசுரன்’ பட புகழ் நடிகை மஞ்சு வாரியார் நடித்திருக்கும் ‘ஆயிஷா’ எனும் படத்தில், ‘நடனப் புயல்’ பிரபுதேவாவின் நடனத்தில் தயாராகி இருக்கும் ,‘ கண்ணிலு கண்ணிலு மெய்யெழுதின கண்ணிலு..’ எனத் தொடங்கும் பாடலின் புதிய லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது.இந்த பாடலை பாடலாசிரியர் பி. கே. ஹரி நாராயணன் மற்றும் சுகைல் கோயா ஆகியோர் எழுதியுள்ளனர். ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலை இந்திய மற்றும் அரபு நாட்டை சேர்ந்த பின்னணி பாடகர்கள் இணைந்து பாடி இருக்கிறார்கள்.

Related Posts
1 of 4

‘ஆயிஷா’ திரைப்படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிப் கக்கோடி எழுத, அறிமுக இயக்குநர் அமீர் பள்ளிக்கல் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் மலையாளம், ஆங்கிலம், அரபு, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஏழு மொழிகளில் தயாராகிறது.‘நடனப்புயல்’ பிரபுதேவாவின் நடன அசைவில் தயாராகியிருக்கும் இந்த லிரிக்கல் வீடியோவில் நடிகை மஞ்சு வாரியருடன் பல நாட்டைச் சேர்ந்த பெண்மணிகள் இடம்பெற்று நடனமாடியிருப்பதாலும், இந்த படத்தில் இடம்பெற்ற ஆயிஷா ஆயிஷா எனும் ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல் இணையத்தில் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது என்பதாலும், இந்த பாடலுக்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.