மஞ்சு வாரியர் நடிக்கும் முதல் இந்தோ- அரேபிய திரைப்படம் ‘ஆயிஷா’!

Get real time updates directly on you device, subscribe now.

‘அசுரன்’ படப்புகழ் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கும் முதல் இந்தோ- அரேபிய திரைப்படம் ‘ஆயிஷா’. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘கண்ணிலு கண்ணிலு..’ எனத் தொடங்கும் பாடலுக்கு ‘நடனப்புயல்’ பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடலுக்கான வீடியோ சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் வெளியாகியிருக்கிறது.

Related Posts
1 of 4

பிரபு தேவாவின் மெய்சிலிர்க்க வைக்கும் நடன அமைப்பால் இந்தப் பாடல், பார்வையாளர்களின் மனதை கவர்ந்திருக்கிறது. இந்த பாடலின் போது பயன்படுத்தப்பட்ட இசை, நேரலையாக பராகுவே மற்றும் செக் குடியரசு நாட்டு நாட்டிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டன.. ‘ஆயிஷா’ திரைப்படம், மலையாள மொழியில் மட்டுமல்லாமல் அரபு மொழியிலும் படமாக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்த படம், சர்வதேச தரத்திலான படைப்பாக உயர்வு பெற்றிருக்கிறது. அதனால் இதனை ஒரு உலக சினிமா என்றும் குறிப்பிடலாம்.இந்த திரைப்படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிப் கக்கோடி எழுத, அறிமுக இயக்குநர் அமீர் பள்ளிக்கல் இயக்கியிருக்கிறார்.

#Ayisha #ஆயிஷா