நாளை நமதே- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

சமூகநீதி பேச வந்திருக்கும் மற்றொரு படம்

சிவகங்கை மாவட்டத்தில் சிவதானுபுரம் என்ற கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக ஒரு தலித் வரக்கூடாது என்று ஆதிக்கச் சாதியினர் பிரச்சனை செய்கிறார்கள். ஒரு காலத்தில் இதை எதிர்க்க இயலாத ஒடுக்கப்பட்ட மக்கள் 15 ஆண்டுகள் கழித்து விழித்தெழுகிறார்கள். அப்படியான விழிப்பை ஏற்படுத்துகிறார் கதையின் நாயகி. முடிவில் சமூக அநீதி தோற்று சமூகநீதி மலர்ந்ததா என்பதே கதை

அமுதா என்ற கேரக்டர் தான் கதையின் நாயகி. மிகச்சிறப்பாக நடித்துள்ளார். சிவகங்கை மாவட்டப் பெண்ணை அப்படியே படம் நெடுக பிரதிபலித்துள்ளார். சூப்பர். ஆதிக்கச் சாதியினராக வரும் அனைவரும் தங்களின் தரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பட்ஜெட்டிற்கு தகுந்தாற்போல் பிரேமிங் வைத்துச் சமாளித்துள்ளார் ஒளிப்பதிவாளர். இசை அமைப்பாளர் பாடல்களில் ஓரளவு கவனம் செலுத்தியுள்ளார். பின்னணி இசையை இன்னும் நன்றாக வாசித்திருக்கலாம்

கதையாக சமூகப் பொறுப்போடு வந்துள்ளது படம். டெக்னிக்கல் பார்வையிலும், திரைக்கதை நேர்த்தியிலும் இயக்குநர் வெண்பா கதிரேசன் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்

ஆக்கத்திறாக இல்லை என்றாலும் நோக்கத்திற்காகப் பாராட்ட வைக்கிறது நாளை நமதே
3/5