ARM- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

தமிழில் வெளிவந்த சினிமாக்களின் சாயலில் ஒரு மலையாள படம்

படம் துவங்கும் போது ஒரு பாட்டி கதை சொல்கிறார். அந்தக் கதையில்… டொவினோ தாமஸ் ஊரில் ஒரு மின்கல் விழுகிறது. அந்த மின்கல்லை ஒரு ராஜா விளக்காக மாற்றி, அவரது தேசத்துக்கு எடுத்துச் சென்றுவிடுகிறார். அந்த ராஜாவின் நாடு செழிக்கிறது. ஒரு கட்டத்தில் ராஜாவின் உறவுக்கு ஒரு ஆபத்து நேர, டொவினோ தாமஸ் காப்பாற்றுகிறார். டொவினோ தாமஸிடம் ராஜா, ‘என்ன வேண்டுமானாலும் கேள்’ என்கிறார். டொவினோ தாமஸ் அந்த அற்புத விளக்கை கேட்கிறார். அது வழங்கப்படுகிறது. ஆனால் வழங்கப்பட்ட விளக்கு போலி என்பது டொவினோவிற்கு மரணப்படுக்கையின் போது தெரியவருகிறது. அவர் வேதனையில் தவித்து உயிர் துறக்கிறார். அதன் பின் தலைமுறைகள் கடந்து, இரண்டு டொவினோ தாமஸ் வாழ்வில் அந்த விளக்கு என்ன செய்கிறது? என்பதாக கதை பயணிக்கிறது. இடையில் சில கிளக்கதைகளும் உண்டு

நம்மூர் விக்ரம் போல உடலை வருத்தி நடித்துள்ளார் டொவினோ தாமஸ். ஆனால் அவரது கேரக்டர் சரியாக எழுதப்படவில்லை. அதனால் அவரது நடிப்பு வீண்வேலை என்பதாகிவிட்டது. இரண்டு சீன்களிலும், எட்டு ஷாட்களிலும் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஏன் இந்த படத்திற்கு? கீர்த்தி ஷெட்டி ஓகே ரகம். மேலும் சில டஜன் நடிகர்களில் யாரும் சோபிக்கவில்லை

இசையும் ஒளிப்பதிவும் ஓரளவு படத்தை தாங்கியுள்ளது. CG-ம் பரவாயில்லை ரகம்

அரதப்பழசான கதையை நவீன திரைக்கதையால் அசரடிக்காமல் விட்டது பெருங்குறை. திரைக்கதையில் எப்போதும் முன்னத்தி ஏராக விளங்கும் மலையாள சினிமா, ARM விசயத்தில் கோட்டை விட்டுள்ளது.

ARM- Flow average
2.5/5