விஷால் – 64 ; சரத்குமார் – 36 : ‘வாட்ஸ் அப்’பை கலக்கும் நடிகர் சங்கத் தேர்தல் கருத்து கணிப்பு

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அவர்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக வாட்ஸ் அப்பில் ஒரு கருத்து கணிப்பும் வைரலாக பரவி வருகிறது.
அந்தக் கருத்துக் கணிப்பில் விஷால் தலைமையிலான அணிக்கு 64 சதவீத ஓட்டுகளும், சரத்குமார் தலைமையிலான அணிக்கு 36 சதவீத ஓட்டுகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை திரைப்பட மற்றும் நடிப்பு கல்லூரி மாணவர்கள் சார்பில் இந்த கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக நடிகர் சங்கத் தேரிதலில் முதல் முறையாக விஷால் அணி புதிய வரலாறு காணாத எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது என்றும் சங்க உறுப்பினர்களிடையே புதிய எழுச்சியை உண்டு பண்ணியிருப்பதாகவும், விஷால் அணி இதில் புதிய வரலாறு படைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் இந்த கருத்துக் கணிப்பு நடிகர் சங்க உறுப்பினர்களிடம் எடுக்கப்பட்டதா? அல்லது பொதுமக்களிடம் எடுக்கப்பட்டதா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
எதுவாக இருந்தாலும் ஆரம்பத்தில் இருந்தே நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான அணியினர் பலம் அதிகரித்துக் கொண்டே போவது குறிப்பிடத்தக்கது.