விக்னேஷ் சிவனையும் கை கழுவினார் நயன்தாரா? : ஸ்ஸ்ஸ்… இப்பவே கண்ணைக் கட்டுதே..!
சிம்பு, பிரபுதேவாவைத் தொடர்ந்து நயன்தாராவின் மூன்றாவது காதலராக மீடியாக்களில் வறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
‘போடா போடா’ தோல்விக்குப் பிறகு அவரின் திறமை மீதான நம்பிக்கையில் தனது பேனரில் வாய்ப்பு கொடுத்தார் நடிகர் தனுஷ்.
வந்த இடத்தில் படப்பிடிப்பில் கவனம் செலுத்தாமல் நயன்தாராவுடம் ரொமான்ஸ் செய்வதிலேயே காலத்தை கடத்தினார். இதனால் படப்பிடிப்புச் செலவு அதிகமானதோடு காலதாமதமும் ஆகியிருக்கிறது.
கடுப்பான தனுஷ் இறுதிகட்ட படப்பிடிப்புக்கு பணம் தராமல் கோபப்பட்டு போன கதையெல்லாம் அரங்கேறியது.
பின்னர் நயன்தாரா தனது சம்பளத்தில் சில லட்சங்களை விட்டுக் கொடுத்து படப்பிடிப்புக்கு உதவினார் என்றார்கள்.
அந்தளவுக்கு லவ் டீப்பாகி விட்டதா என்றால் அதுதான் இல்லை என்கிறது நயன்தாரா தரப்பு.
விக்னேஷ் சிவனுடன் நயன் தாராவுக்கு இருப்பது வெறும் நட்பு மட்டும் தான். அவருடன் காதல் எல்லாம் இல்லை. மனம் விட்டுப் பேச ஒருவர் வேண்டும் அதற்காகத்தான் விக்னேஷ் சிவனுடன் நயன் தாரா நட்பை தொடர்கிறார்.
உண்மையில் நயன் தாரா ஒரு தொழிலதிபரை ரகசியமாக காதலித்து வருகிறார். அவரைத் தான் திருமணமும் செய்வார். அதுவரைக்கும் விக்னேஷ் சிவன் நயனுக்கு ச்சும்மா. டைம் பாஸ் அம்புட்டுத்தான் என்கிறார்கள்.
அதுவும் உண்மையாகத்தான் இருக்குமோ என்று யோசிக்கும் விதமாக சில தினங்களுக்கு முன்பு எனக்கும் நயன் தாராவுக்கும் காதல் இல்லை என்று விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்ஸ்ஸ்….. இப்பவே கண்ணைக் கட்டுதே…?