விவசாயிகளுக்கு ஆதரவான அடையாள போராட்டத்திற்கு நடிகர் சங்கம்முழு ஆதரவு

Get real time updates directly on you device, subscribe now.

vishal1

விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25-ம் தேதி செவ்வாய் கிழமையன்று அனைத்து கட்சிகள் சார்பாக நடக்கும் மாநிலம் தழுவிய அடையாள போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்க்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் தங்களது ஆதரவை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related Posts
1 of 100

அதில் கூறியிருப்பதாவது : “பல வருடங்களாக இயற்கையாலும், காவிரி பிரச்சனையாலும் தொடர்ச்சியாக ஏமாற்றபட்டு வரும் தமிழக விவசாயிகள், அரசிடம் வாங்கிய கடனை கட்ட முடியாமல், பலரும் தற்கொலை முடிவை நாடி வருகின்றது வேதனை அளிக்கிறது.

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டியது மத்திய – மாநில அரசுகளின் கடமையாகும். அதை வலியுறுத்தி வருகிற 25-ம் தேதி அனைத்து கட்சிகள் நடத்தும் மாநிலம் தழுவிய அடையாள போராட்டத்திற்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது முழு ஆதரவையும் தெரிவித்து கொள்கிறது” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.