நந்திவர்மன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

பெயரில் உள்ள வீரியம் படத்தில் இருக்கிறதா?

வஞ்சத்தால் வீழ்த்தப்பட்ட நந்திவர்ம பல்லவன் கட்டிய கோவில் ஒன்று செஞ்சி அருகே மண்ணுக்குள் புதையுண்டு இருப்பதாக தொல்லியல் துறை அறிகிறது. உடனே அவ்விடத்தை ஆய்வு செய்கிறார்கள். அந்த ஆய்வுக்கு ஊரார் மத்தியில் எதிர்ப்பு கிளம்புகிறது. காரணம் ஆய்வு செய்யும் நேரத்தில் சில மரணங்கள் நடக்கின்றன. இப்படியான சூழலில் ஆய்வுக்காரர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க போலீஸ் அதிகாரியான ஹீரோ வருகிறார். ஆய்வு நடந்ததா? மரணங்கள் நின்றதா? நந்திவர்மன் காலத்து கோவிலின் நிலை என்ன? இவற்றுக்கான விடைகளே படம்

சுரேஷ் ரவி ஒரு ஹீரோவாக தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் வாய்ப்புள்ள படம் இது. ஆனால் அவர் சரியான நடிப்பை வழங்கவில்லை. அவர் ஏற்றுள்ள கேரக்டருக்கு அந்நியப்பட்டே இருக்கிறார். ஹீரோயின் ஆஷா வெங்கட் நன்றாக நடித்துள்ளார். காதல் காட்சிகள் மட்டும் படத்தின் தேவையற்ற புட்டேஜ். கோதண்டம் குடிகாரராக வந்து சிரிக்க வைக்க முயல்கிறார். ஆடுகளம் முருகதாஸை சரியாகப் பயன்படுத்தவில்லை..
நிழல்கள் ரவி கஜராஜ் இருவரும் ஓரளவு கவனம் ஈர்க்கிறார்கள். போஸ் வெங்கட் கேரக்டர் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. அவரும் நன்றாக நடித்துள்ளார்

இசையில் ஓரளவு கவனிக்க வைக்கிறார் ஜெரார்ட் பெலிக்ஸ். ஆர்.ஆர் & பாடல்கள் ஒகே ரகம். ஒளிப்பதிவாளர் சேயோன் முத்து தரமான விஷுவலை கொடுத்துள்ளார். எடிட்டர் சான்லோகேஷ் நினைத்திருந்தால் படத்தை இன்னும் வெட்டியிருக்க முடியும்

மிகவும் இன்ட்ரெஸ்டிங்கான கதை. அதை சரியான விதத்தில் இயக்குநர் அணுகவில்லை. வசனங்களிலும் மெச்சூட் தன்மை இல்லை. திரைக்கதையில் நல்ல உழைப்பைச் செலுத்தியிருக்கலாம்

நந்திவர்மன் நேர்த்தியில் பிந்தியுள்ளான்
2.25/5