இயக்குனர் பாரதிராஜா போல் ராம்தேவ்-கே.பாக்யராஜ்!

Get real time updates directly on you device, subscribe now.

இயக்குனர்  ராம்தேவ்  கதை வசனம் எழுதி தயாரித்து இயக்கி இருக்கும் கிரைம் த்ரில்லர்   “மூன்றாம் மனிதன்”
இதில் கே.பாக்யராஜ், சோனியா அகர்வால், பிரனா, ஶ்ரீ நாத் உள்ளிட்ட பலர் நடித்திருக் கின்றனர்.  இப்படம் டிசம்பர் 29ம் தேதி ரிலீஸ் ஆகிறது.முன்னதாக இத் திரைப்படப் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில்  நடந்தது. படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும்  இயக்குனர் கே.பாக்யராஜ் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.  அவர் கூறியதாவது:

இயக்குனர் ராம்தேவ் தயாரிப்பாளர்களை எப்படி பிடிக்கிறார் என்று தெரியவில்லை. அதற்கு ஒரு திறமை வேணும். என்னுடைய உதவியாளர்கள் சிலர் நன்றாக வந்து விடுவார்கள்  என்று எண்ணுவேன். ஆனால் வாய்ப்பு கிடைக்காது. அந்த வகையில் ராம்தேவ். நான்கைந்து தயாரிப்பாளர் களை பிடித்துவிடுகிறார். ஒரு டெக்னீஷியன் என்ற  முறையில் இந்த படத்தில் நீங்கள் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று என்னிடம்  கேட்டார். சரி என்ற ஒப்புக்கொண்டேன். அதற்கு பிறகுதான் தெரிந்தது அவரும் வேஷம் போட்டுக் கொண்டு வந்து நடிக்க நின்றார்.  முக்கியமான வேடத்தை  எடுத்துக் கொண்டு நடித்தார். இப்படத்தின் கதை வித்தியாசமாக இருந்தது. படத்தின் ஓப்பணிங்கில் நானும் பிரணாவும் வருவோம் கிளைமாக்ஸ்சிலும் அப்படியே முடியும். கிரைம் சப்ஜெக்ட் என்றாலும் கிளைமாக்சில். சென்டிமென்ட்டாக முடியும் வகையில் கதை அமைத்திருக்கிறார்.  படத்தில் ஏதாவது மெசேஜ் இருக்கா என்று கேட்டால், மெசேஜ் இருக்கிறது. இதில் நடித்திருக்கும் பிரணா அவரது வயதுக்கு மீறிய பாத்திரம் ஏற்று செய்திருக்கிறார். அப்படி செய்வது ஒரு அனுபவம். பாலசந்தர் சாரின் மூன்று முடிச்சு படத்தில் ஶ்ரீ தேவி நடித்தபோது அவரது வயதுக்கு மீறிய ஒரு பாத்திரத்தில் நடித்தார். இந்த அனுபவம் அவர்களுக்கு பின்னால் உதவியாக இருக்கும்.

சோனியா அகர்வாலுடன் இரண்டு நாள்  இந்த படத்தில் நடித்தேன். அவர் வசனம் பேசும் போது சத்தமே  கேட்காது. ஆனால் லிப் மூவ்மென்ட்ஸ் சரியாக இருக்கும். ஶ்ரீநாத்தும்  முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்  அவர் டைரக்ஷன் செய்து கொண்டிருந்தார் இப்போது நடிக்க வந்து விட்டார்  டைரக்ஷன்  செய்வது கஷ்டம் அதான் நிறைய டைரக்டர்கள். நடிக்க வந்து விட்டார்கள். 

இந்த படத்தை பொறுத்தவரை நிறைய  டெக்னீஷியன்கள்  ஒத்துழைத்திருக்கிறார்கள் நிறைய பேர் படம் எடுப்பதற்கு  ரொம்ப சிரமப்படுவார்கள்.  படம் எடுத்துவிட்டு அதை ரிலீசுக்கு கொண்டு வருவது அதைவிட பெரிய  கஷ்டம் அந்த மாதிரி ஏகப்பட்ட படங்கள் தேங்கிக் கிடக்கிறது. ஆனால் இந்த படத்தை 29ம் தேதி வெளியீடு என்று இயக்குனர் ராம் தேவ் அறிவிப்பு கொடுத்து விட்டார்.அதற்கு அவரது விடா முயற்சிதான் காரணம். எங்க இயக்குனர் பாரதிராஜா சார் என்ன எடுக்க வேண்டுமோ அதை சரியாக எடுப்பார். அதற்காக கடுமையாக உழைப்பார். அதேபோல் ராம் தேவும்  என்ன எடுக்க வேண்டுமோ அதை எடுப்பார். கடுமையாக,  சின்சியராக உழைப்பார். ஒரு சிலர் ஒரு நாள் இரண்டு நாள் கூடுதலாக எடுப்பார்கள். ராம் தேவ் பொறுத்த வரை ஒரு நாள் இரண்டு நாள் முன்னதாகவே முடித்த விடுவார். தமிழ் ரசிகர்கள் புதியவர்கள் நடித்தாலும் அதை பார்ப்பார்கள். அதன்பிறகு வாய்மொழி சொல் கேட்டு பார்த்து படத்தை வெற்றி பெற செய்வார்கள். ராம்தேவுக்கும் அவரது குழுவும் எனது வாழ்த்துக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். தெரிவித்துக்கொள்கிறேன்.