ரம்யா நம்பீசனின் காதலர் ஆனார் ‘மீனாட்சி’யின் மூன்றாவது புருஷன்!
”சுட்ட கதை”, ”நளனும் நந்தினியும்” என இரு வித்தியாசமான படங்களை தயாரித்த லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன். அந்தப் படங்களின் படுதோல்வியால் அடுத்தடுத்து எடுக்கவிருந்து படங்களை ட்ராப் செய்தார்.
இடையில் காணாமல் போனவர் இப்போது மீண்டும் தனது தயாரிப்பு நிறுவனத்தை தூசுதட்டி “நட்புனா என்னனு தெரியுமா” என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவக்குமார் இப்படத்த்தின் இயக்குநராக அறிமுகமாகிறார்..
முன்று நண்பர்கள் ஒரு பெண்னை காதலிக்க விரும்புகிறார்கள், இவர்கள் மூவரில் ஒருவரான கதாநாயகன் எவ்வாறு மற்ற நண்பர்களையும் தாண்டி கதாநாயகியாய் தன் மீது காதல் வயப்பட வைக்கிறான் என்பததையே ரசிகர்கள் குடும்பத்தோடு பார்த்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதமாக உருவாகிறது “நட்புனா என்னனு தெரியுமா”.
இந்தப்படத்தில் சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சியின் மூன்றாவது புருஷனாக நடித்த கவீன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்க, இப்படத்தின் நகைச்சுவைக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் மொட்டை ராஜேந்திரன், இளவரசு,அழகம் பெருமாள், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்க இவர்களுடன் அருண்ராஜா காமராஜ்,ராஜு, வெங்கி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.