விமலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயா!

Get real time updates directly on you device, subscribe now.

த்ரிஷா நடிப்பில் வெளியான ‘மோகினி’ படத்தைத் தொடர்ந்து ஆர்.மாதேஷ் இயக்கி வரும் படம் ‘சண்டகாரி – தி பாஸ்’.

வித்தியாசமான தலைப்போடு தயாராகும் இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ரேயா நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, சத்யன், கே.ஆர், விஜயா, ரேகா, கிரேன் மனோகர், மகாநதி சங்கர், உமா பத்மநாபன் மற்றும் பல முன்னனி நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். சூப்பர் ஹிட்டான ‘மகதீரா’ படத்தில் வில்லனாக நடித்த தேவேந்தர் சிங் கில் இப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.

மலையாளத்தில் ‘திரிஷ்யம்’ எப்படி சூப்பர் ஹிட் அடித்ததோ, அது போலவே கேரளாவில் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த ‘மை பாஸ்’ என்ற படத்தை தழுவி எடுக்கப்படும் படம் இது.

Related Posts
1 of 139

காட்சிகள் நியூயார்க் வெனிஸ் லண்டன், கொச்சின், கோவா, காரைக்குடி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

“வித்தியாசமான ஆக்‌ஷன் காமெடி படமான இந்தப்படம் முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் இருக்கும்” என்றார் இயக்குனர் ஆர்.மாதேஷ்.