டீஸரே ஹாலிவுட் படத்தின் காப்பியா..? : ‘பண்டிகை’ டீமை கழுவி கழுவி ஊற்றிய ரசிகர்கள்

Get real time updates directly on you device, subscribe now.

Pandigai1

கிருஷ்ணாவும் அடுத்தடுத்து படங்கள் நடித்துத்தான் பார்க்கிறார். எப்படியாவது பட வாய்ப்பு கிடைத்து விடுகிறதே தவிர, நடிக்கிற படங்கள் தான் ஒரு வாரத்துக்கு மேல் தியேட்டரில் தங்க மாட்டேன் என்கிறது.

நிஜம் இப்படியிருக்க, தன் காதல் கணவருக்காக  திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த  இயக்குநர் அகத்தியனின் மகளும், நடிகையுமான விஜயலட்சுமி அதில் முதல் படமாக கிருஷ்ணாவை ஹீரோவாக வைத்து ‘பண்டிகை’ படத்தை தயாரித்து வருகிறார்.

ஃபெரோஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஆனந்தி நடித்திருக்கிறார். நேற்று முன் தினம் ரிலீசான இந்தப் படத்தின் டீஸரைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து விட்டார்கள்.

Related Posts
1 of 3

என்ன காரணம்?

ஒரு முழுப்படத்தை மற்ற மொழிகளில் இருந்து காப்பியடிப்பது காலம் காலமாக நடந்து தான் வருகிறது. ஆனால் இந்த படத்தின் டீஸரே ‘Fight Club’ என்ற ஆங்கிலப்படத்திலிருந்து சுடப்பட்டதாம்.

இந்த உண்மையை ட்விட்டரில் ரசிகர்கள் ஆதாரத்தோடு ஷேர் செய்து டைரக்டரை கழுவி கழுவி ஊற்றவும் அதிர்ந்து விட்டது ‘பண்டிகை’ படக்குழு.

‘Fight Club’ படத்துக்கும் எங்கள் ‘பண்டிகை’ படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. டீஸர் அந்தப்படத்தின் சாயலில் இருக்கலாம். ஆனால் படத்தின் கதைக்களம் வேறு. கண்டிப்பாக அந்தப்படம் போல இருக்கவே இருக்காது என்று சத்தியம் செய்யாத குறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.