மார்க்கெட் ரொம்ப டல்லு! : அதுக்காக இவ்வளவு இறங்கி வரணுமா நயன்?

Get real time updates directly on you device, subscribe now.

nayanthara

”மாயா” படம் எந்தளவுக்கு நயன்தாராவின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியதோ? அதே அளவுக்கு அவர் நடிப்பில் வெளியான ”டோரா” படம் கீழிறக்கி விட்டு விட்டது.

இப்படி ஒன்றிரெண்டு படங்களிலேயே தடாலடியாக மார்க்கெட் இறங்கியதால் அவருடைய நடிப்பில் தயாராகியிருக்கும் அறம் படம் தயாராகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் ரிலீஸ் செய்ய முடியாமல் பெரும் திண்டாட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

Related Posts
1 of 50

இதனைக் கேள்விப்பட்ட நயன்தாரா தனது ”ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்” என்கிற பிடிவாதத்தை தளர்த்தி விட்டு தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு உட்பட பிற மொழிகளிலும் வாய்ப்பு தேட ஆரம்பித்து விட்டார்.

அதோடு இதுவரை இளம் ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி போட்டு வந்தவர் வயசான ஹீரோவான பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கவும் ஓகே சொல்லியிருக்கிறாராம். அதோடு இனி திரையுலக விழாக்களிலும் கலந்து கொள்ளலாம் என்கிற முடிவுக்கும் வந்திருக்கிறாராம்.

வாய்ப்புக்காக இவ்வளவு கீழ இறங்கணுமா நயன்?