சிவகார்த்திகேயன் ஓவரா சம்பளம் கேட்கிறாப்ல… : டைரக்டர் பகிரங்க குற்றச்சாட்டு

Get real time updates directly on you device, subscribe now.

siva1

பாண்டிராஜ் இயக்கிய ‘மெரினா’வில் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகி விட்டார்.

பொங்கலுக்கு ரிலீசான படங்களில் கூட அவரது ‘ரஜினி முருகன்’ படம் வசூலில் முதலிடத்தில் இருக்கிறது.

ஏற்கனவே தனது உண்டர்பார் புரொடக்‌ஷனால் சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. அந்தளவுக்கு எங்கள் நிறுவனம் வளரவும் இல்லை என்று சொல்லியிருந்தார் சிவகார்த்திகேயன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய நடிகர் தனுஷ்.

Related Posts
1 of 68

இப்போது சிவகார்த்திகேயனை மெரினாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்திய டைரக்டர் பாண்டிராஜும் அதே போன்றதொரு குற்றச்சாட்டை மீடியாக்கள் முன்பு பகிரங்கமாக வைத்தார்.

உங்க பசங்க புரொடக்‌ஷன்ல சிவகார்த்திகேயனை வெச்சு படமெடுப்பீங்கள…? என்று ஒரு நிருபர் கேட்டார்.

”அவர் கேட்கிற சம்பளத்தை என்னால கொடுக்க முடியாது. வரை வெச்சு படமெடுக்கிற அளவுக்கு என்னோட பசங்க புரொடக்‌ஷன்ஸ் வளரவில்லை… நான் புதுமுகங்களை வைத்து அடுத்ததா ஒரு படம் பண்ணப்போறேன்” என்றார்.

சிவகார்த்திகேயனின் சம்பளம் பற்றி வளர்த்து விட்டவர்களே இப்படி வெளிப்படியாக கருத்து சொன்னாலும் வியாபாரத்துக்கு ஏத்த மாதிரி சம்பளம் கேட்கிறது சினிமாவுல தப்பா..?ங்கிறது என்பது தான் நடுநிலையாளர்களின் கேள்வி..?